விஜய்யிடம் வரும் ஹரி
வெற்றிப் பட இயக்குநர் ஹரி, அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கத் தயாராகி வருகிறார். விஜய்க்காக சூப்பரான கதை ஒன்றை ரெடி செய்து விட்டாராம்.
| Click here for more images |
சூர்யா, ஆசினை வைத்து வேல் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஹரி. இப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட முடியும் தருவாயை எட்டியுள்ளது. ஆசின் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுட வேண்டியது மட்டுமே பாக்கி.
பக்காவாகத் திட்டமிட்டு படம் எடுக்கும் சில இயக்குநர்களில் ஹரியும் ஒருவர். இந்த நிலையில் எல்லா ஹீரோக்களையும் வைத்து கிட்டத்தட்ட படம் எடுத்து விட்ட ஹரி அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விஜய் தரப்பிடம் பேச, அவர்களோ முதலில் நல்ல கதையை ரெடி செய்துவிட்டு சொல்லுமாறு கூறினார்களாம்.
இதையடுத்து விஜய் பார்முலாப்படி கதையை உருவாக்கியுள்ளார் ஹரி.
விஜய்க்குக் கதை பிடித்து விட்டால், கலக்கல் படத்தைக் கொடுக்க விஜய்யும், ஹரியும் கை கோர்ப்பார்கள்.
ஹரி படங்களில் கிராமத்து பேக்கிரவுண்ட் படு ஸ்டிராங்காக இருக்கும். எனவே ஹி படத்தில் விஜய் நடித்தால் நிச்சயம் அது 'முரட்டுக் காளை' ரேஞ்சுக்கு இருக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications