100 கோடி ஓபனிங்.. ஹாட்ரிக் அடிப்பாரா விஜய்.. லியோ, கோட் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜன நாயகன்?

சென்னை: தமிழ் சினிமாவில் முதல் நாளே 100 கோடி ஓபனிங் வசூலை விஜய் மற்றும் ரஜினிகாந்த் மட்டுமே பெற்றுள்ளனர். லியோ மற்றும் கோட் என விஜய் நடித்த கடைசி 2 படங்களும் முதல் நாளில் 100 கோடி வசூல் ஓபனிங்கை உலகளவில் ஈட்டியது. இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் ஹாட்ரிக் அடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஜனவரி 9ம் தேதியே திட்டமிட்டபடி ஜன நாயகன் வெளியாகி இருந்தால் இந்த கேள்வியே இந்நேரம் எழுந்திருக்காது. அசால்ட்டாக 100 கோடி ஓபனிங் வசூலில் விஜய் ஹாட்ரிக் அடித்திருப்பார்.

Will Vijay hit a 100 Crore Opening hatrick at Box Office with Jana Nayagan

ஆனால், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தாமதமான நிலையில், ஒட்டுமொத்த படமும் திருட்டுத் தனமாக ஹெச்டி தரத்தில் லீக்காகி 1.2 கோடி பேர் அதனை டவுன்லோடு செய்து பார்த்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், 100 கோடி ஓபனிங் சாத்தியமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் கடைசி படம்: இளைய தளபதியாகவும் தளபதியாகவும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்கள் நாயகனாக முதலமைச்சராகவே மாறியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டை பார்க்கவே தளபதி ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுப்பது உறுதி. இதற்கு மேல் திரையரங்குகளில் விஜய் நடித்த படங்களின் FDFS கொண்டாட்டங்கள் எல்லாம் வரப்போவதில்லை என்பதால் ஒன் லாஸ்ட் டைம் என ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டரில் திருவிழா கொண்டாட்டங்களை நடத்துவார்கள் என்பது உறுதியாகி உள்ளது. பல முறை டிவியில் கில்லி படத்தை பார்த்தாலும் தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆன படத்தை பாக்ஸ் ஆபீஸிலும் வெற்றிப் பெற வைத்து சாதனை படைத்த ரசிகர்கள் விஜய்க்கு சினிமாவில் ஸ்பெஷல் ஃபேர்வெல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 கோடி ஓபனிங்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எல்சியூ ஹைப் உடன் விஜய், த்ரிஷா நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 148.5 கோடி வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான போஸ்ட்டரை வெளியிட்டதும் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதந்தனர். ரஜினிகாந்த் நடித்து அதே ஆண்டு வெளியாகி 600 கோடி வசூல் செய்த ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை விட லியோ வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் செகண்ட் ஹாஃப் சொதப்பல்களால் 1000 கோடி வசூலை ஈட்ட முடியாமல் லியோ வசூல் 600 கோடியுடன் நின்று போனது எனக் கூறப்படுகிறது.

கோட் வசூல் சாதனை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான கோட் திரைப்படமும் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூல் செய்து 2வது முறையும் விஜய் படத்துக்கு 100 கோடி வசூல் சாதனையை கொண்டு வந்து சேர்த்தது.

ஹாட்ரிக் அடிப்பாரா ஜன நாயகன் விஜய்?: இந்நிலையில், விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வரும் ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முதல் நாள் 100 கோடி ஓபனிங் வசூலில் ஹாட்ரிக் அடிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் ஜன நாயகன் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில், புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் சைட்டுகள் கிராஷ் ஆகுதா? இல்லையா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X