ஒரு வேளை 'விஜய் ராசி' ஒர்க் அவுட் ஆனா பாஜகவுக்கு சிக்கலாயிடுமே....!!
கோவை: நடிகர் விஜய்க்கு ஒரு நல்ல ராசி உள்ளது. அதை நினைத்து பாஜகவினரில் சிலர் தற்போது பீதியாகியுள்ளனராம்.
அதாவது லைம்லைட்டில் இருக்கும் யாரையாது விஜய் சந்தித்தால் உடனே அவரது செல்வாககு சரிந்து சின்னாபின்னமாகிப் போய் விடுகிறது என்பதுதான் அந்த ராசியாம்.
இப்போது அவர் மோடியைப் பார்த்திருப்பதால் அவருக்கும் விஜய் ராசி ஒர்க் அவுட் ஆகி விடுமோ என்று மோடி நலம் விரும்பிகள் அஞ்சுகிறார்களாம்.

அன்னா... அன்னா...
இப்படித்தான் முன்பு அன்னா ஹஸாரே போராட்டம் நாட்டையே உலுக்கிய நிலையில் அவரை டெல்லிக்குப் போய் பார்ததுப் பேசி விட்டு போட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தார் விஜய்.

புல்லரித்த செல்வாக்கு செல்லரித்துப் போனதே
அதுவரை அன்னா பெயரைக் கேட்டாலே சும்மா நாடே புல்லரித்துப் போய் நின்ற காலம் அது. ஆனால் விஜய் சந்திப்புக்குப் பின்னர் அன்னா கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கை இழந்தார்.

அன்னாவைப் பிரிந்த 'செவ்வாழை...'
பருத்தி வீரன் கார்த்தியுடன் எப்போதும் கூடவே இருக்கும் செவ்வாழை போல அன்னாவுடன் கூடவே இருந்த கெஜ்ரிவாலும் பிய்த்துக் கொண்டு போய் விட்டார்.

லெவலே மாறிப் போச்சே
இப்போது அன்னாவின் செல்வாக்கு எந்த லெவலில் இருக்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ராகுல் காந்தி
அடுத்து ராகுல் காந்தி. மோடிக்கு ஈக்வலாக அப்போது பெரிதாக பேசப்பட்டார் ராகு்ல் காந்தி. அவருக்கு கட்சியிலும் சரி, வெளியிலும் சரி பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த சமயத்தில்தான் ராகுலையும் பார்த்து விட்டு வந்தார் விஜய்.

எல்லாமே கேலிக்கூத்தாகிப் போன கொடுமை
ஆனால என்னே ஒரு துரதிர்ஷடம்.. அதன் பிறகு ராகுல் என்ன செய்தாலும அது கேலிக்கூத்தாக மாறிப் போனது. அவர் என்ன பேசினாலும் காமெடியாகிப் போனது.

இப்ப மோடி...
இப்போது மோடியைப் பார்த்துள்ளார் விஜய். இங்கும் அவரது ராசி ஒர்க் அவுட் ஆகி விடுமோ என்று பாஜகவினர் முகங்களில் சின்னதாக ஒரு பய பிராந்தி கப் கப்பாக அப்பிக் கிடக்கிறதாம்.
பார்க்கலாம்.... !


Click it and Unblock the Notifications











