செய்வீங்களா, செய்வீங்களான்னு இப்ப கேட்க மாட்டீங்களா விஜய்?
Recommended Video

சென்னை: விஜய் தற்போது கம்முன்னு இருக்கும் நேரம் இல்லை.
சர்கார் படத்தில் இலவச மிக்சி, கிரைண்டரை எரிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அது நீக்கப்பட்டது. இதையடுத்து இலவச மிக்சி, கிரைண்டரை தீயில் போட்டு எரித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
சிலர் சைக்கிள், லேப்டாப்பை கூட தீயில் போட்டுவிட்டனர்.

போலீஸ்
கையில் அரிவாளை வைத்துக் கொண்டு கெட்ட வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் இரண்டு பேரை போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் 23452348, 23452350 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

எரிப்பு
அரசு கொடுத்த இலவச பொருட்களை எரித்து விஜய் ரசிகர்கள் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வலம் வருகின்றன. இதை எல்லாம் நிறுத்த வேண்டும் என்றால் விஜய்யால் மட்டுமே முடியும். தயவு செய்து யாரும் இலவச பொருட்களை எரிக்க வேண்டாம், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று விஜய் கோரிக்கை விடுக்க வேண்டும்.

விஜய்
சர்கார் பிரச்சனை துவங்கியதில் இருந்தே விஜய் அமைதியாக இருக்கிறார். இது கம்முன்னு இருக்க வேண்டிய நேரம் இல்லை, தளபதி வாய் திறந்து பேசினால் மட்டுமே அவரின் ரசிகர்கள் அமைதி காப்பார்கள். விஜய் பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாலாபிஷேகம்
சர்கார் ரிலீஸின்போது தனது கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று விஜய் கோரிக்கை விடுத்தார். தற்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்த இலவச பொருட்கள் எரிப்புக்கு ஒரு முடிவு கட்ட முடியும். இது கம்முன்னோ, உம்முன்னோ இருக்க வேண்டிய நேரம் இல்லை. பளிச்சுன்னு அறிக்கை விட வேண்டிய நேரம்.


Click it and Unblock the Notifications











