கூலி மிஸ் ஆகிடுச்சு.. விஜய்யின் ஜன நாயகன் படமாவது 1000 கோடி வசூலை குவிக்குமா?.. இப்படியொரு வாய்ப்பு?
சென்னை: தமிழ் சினிமா, மலையாள சினிமாவை தவிர பாலிவுட், டோலிவுட் மற்றும் கன்னட சினிமா உலகங்கள் 1000 கோடி வசூல் சாதனையை அடைந்து விட்டன. டோலிவுட்டில் பல படங்கள் பாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்து வருகின்றன. இந்நிலையில், ஜன நாயகன் படமாவது 1000 கோடி வசூல் சாதனையை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருமா என்கிற கேள்வியும் அதற்கு சூப்பர் வாய்ப்பு இருப்பதாக சில பதில்களும் வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு தியேட்டரில் ஜன நாயகன் படம், அரசியலில் தவெக படம் என 2 பெரிய படங்களை விஜய் ஓட்ட காத்திருக்கிறார். இன்று திருச்சியில் மக்களை சந்தித்து வரும் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்ட மக்களையும் சந்திக்க உள்ளார்.

வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் என கிண்டல் அடித்தவர்கள் தற்போது வீக்கெண்ட் அரசியல்வாதிகள் என கிண்டல் அடித்து விஜய்யின் அரசியல் வருகையை எதிர்த்து வருகின்றனர். ஆனால், மக்கள் கூட்டம் விஜய்யை காண குவிந்து வருவதை பார்த்தால் நிச்சயம் பல கட்சியினருக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் என்று தவெக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
டிரெண்டாகும் ஜன நாயகன்: நடிகர் விஜய் அரசியல் தலைவர் விஜய்யாக அப்டேட் ஆகி உள்ள நிலையில், திருச்சியில் விஜய்யின் வருகையை முன்னிட்டு ட்விட்டரில் ஜன நாயகன் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் சீக்கிரமே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கூலி மிஸ் ஆகிடுச்சு: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 600 கோடி வசூல், லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய லியோ 600 கோடி வசூல் என அலப்பறை கிளம்பிய நிலையில், ரஜினிகாந்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் கண்டிப்பாக 1000 கோடி அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப நாகார்ஜுனா, செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா மற்றும் பாலிவுட்டில் இருந்து அமீர்கான் என நடிகர்கள் பட்டாளமும் இணைந்த நிலையிலும் கதை மற்றும் திரைக்கதை சொதப்பல் காரணமாக கூலி திரைப்படம் அந்த இலக்கை அடைய முடியவில்லை. 500 கோடி வசூல் வந்ததாக கூட தயாரிப்பு நிறுவனம் படம் வெளியாகி 25 நாட்கள் கடந்து ஓடிடியில் வெளியான பின்னர் கூட அறிவிக்கவில்லை. 4 நாட்களில் 404 கோடி என்பதாவது உண்மையா? அல்லது அதுதான் மொத்த வசூலா? என ரஜினிகாந்தின் ஹேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஜன நாயகன் 1000 கோடி வசூல் செய்யுமா?: தளபதி விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் என்பதால் அந்த படமாவது கோலிவுட்டுக்கு 1000 கோடி வசூல் சாதனையை கொண்டு வருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் என ஏகப்பட்ட நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் தான் இந்த படத்துக்கும் இசையமைப்பாளர்.
13 நாட்கள் தொடர் விடுமுறை: கூலி படத்துக்கு கிடைத்த 4 நாட்கள் விடுமுறை காரணமாக மிகப்பெரிய வசூலை 4 நாட்களில் அந்த படம் ஈட்டியது என்று கூறுகின்றனர். பொங்கல் விடுமுறையை பக்காவாக விஜய் பிளான் பண்ணி ஜனவரி 9ம் தேதியே ரிலீஸ் செய்யும் நிலையில், ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை ஜன நாயகன் படம் வெளியானால் சனி, ஞாயிறு விடுமுறை, செவ்வாய்க்கிழமை போகி, அந்த வாரம் முழுவதும் பொங்கல் விடுமுறை அதன் பிறகு மீண்டும், சனி, ஞாயிறு வருகிறது. ஜனவரி 26 குடியரசு தினம் விடுமுறை என ஒட்டுமொத்தமாக 13 நாட்கள் விடுமுறை நாட்கள் வருவதால் ஜன நாயகன் படம் நல்லா இருந்தா 1000 கோடி வசூல் சாத்தியம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். பராசக்தி, ராஜாசாப் உள்ளிட்ட படங்கள் போட்டியாக வெளியாகவுள்ள நிலையில், பெரிய வசூல் சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











