பிலிம்பேர் விருது வாங்குவது என்பது அனைத்து நடிகர்களின் கனவு...: தனுஷ்

சென்னை: பிலிம்பேர் விருதுகளை பெறுவது என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

திரையுலகில் சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஐடியா நிறுவனம் பிலிம்பேர் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2013ம் ஆண்டிற்கான 61வது பிலிம்பேர் விருது சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே நான்கு முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கிய நடிகர் தனுஷ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது :-

ஆரோக்கியமான விருது...

ஆரோக்கியமான விருது...

மற்ற விருதுகளை விட பிலிம்பேர் விருது தனிச்சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்த விருது அனைத்து மொழி படங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும்.

நடிகர்களின் கனவு...

நடிகர்களின் கனவு...

இவ்விருதை ஒரு தடவையாவது பெற்று விட வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகனின் கனவு. எனக்கும் அந்த கனவு இருந்தது.

காத்திருந்தேன்...

காத்திருந்தேன்...

நான் 2002ம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தேன். ஆனாலும் இந்த விருதுக்காக நான் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆடுகளம்...

ஆடுகளம்...

இறுதியாக ஆடுகளம் திரைப்படத்திற்காக எனக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. அதன் பின்னர் 3 திரைப்படத்தி்றகாக எனக்கு மூன்று பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது.

வரும் ஆண்டுகளிலும்...

வரும் ஆண்டுகளிலும்...

இந்த விருது இந்த வருடமும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறென். இந்த வருடம் மட்டுமல்ல அனைத்து வருடமும் ஒரு பிலிம்பேர் விருது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மரியான்...

மரியான்...

இந்தாண்டும் விருது பெயர்ப்பட்டியலில் தனுஷ் நடித்த மரியான் திரைப்படம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X