ரவி மோகனுக்கு உதவ தயாரான பெண் சாமியார்.. பழைய நிலைமைக்கு கொண்டு வந்துடுவாங்களாம்
சென்னை: நடிகர் ரவி மோகன் சில வருடங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், 'எதிர்கால நலன் கருதி மனைவி ஆர்த்தியிடமிருந்து பிரிகிறேன்' என குறிப்பிட்டிருந்தார். திருமணமாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது அனைவருக்குமே அதிர்ச்சியை கிளப்பியது. தொடர்ந்து கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் அந்த உறவும் பாதியில் முடிந்துவிட்டது. இதனையடுத்து விரக்தியாகி செய்தியாளர்கள் சந்திப்பில் குமுறிய அவர்; மன நிம்மதிக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் சென்று வந்தார்.
மனைவி ஆர்த்தியிடமிருந்து பிரிவதாக அறிவித்த ரவி மோகன்; பின்னணி பாடகி மற்றும் தெரபிஸ்ட்டான கெனிஷாவுடன் நெருக்கமாக பழகிவந்தார். விரைவில் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றெல்லாம் கருதப்பட்டது. நிலைமை இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு கெனி வெளியிட்டிருந்த வீடியோவில், 'நான் ரவி மோகனின் குடும்பத்தை பிரிக்கவில்லை. நான் சென்னையை விட்டு வெளியேறுகிறேன்' என பல விஷயங்களை பேசியிருந்தார். அதற்கு ஆர்த்தியும் பதிலடி கொடுத்திருந்தார்.

ரவி மோகனின் செய்தியாளர் சந்திப்பு: இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார் ரவி மோகன். அப்போது பேசிய அவர், "நான் ஒன்றும் Born With Silver Spoon கிடையாது. கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு நான் வந்தேன். அனைத்தையுமே நான் கொடுத்துவிட்டேன். 104 டிகிரி காய்ச்சலோடு எல்லாம் நான் ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கிறேன். ஒரு இட்லி நடிகை என்னை பற்றி பேசுகிறார். என்னை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது. பெர்சனலாக பேசவெல்லாம் கூடாது. அவரால் எங்கள் குடும்பம் நாசமாக போக பார்த்தது என்று மூன்று சீனியர் நடிகர்கள் சொன்னார்கள்.
ரத்த வாந்தி வருகிறது: எனக்கு ரத்த வாந்தி வந்துகொண்டிருக்கிறது. பிளாக் மேஜிக் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்பதற்காக அதை அவர்கள் செய்தார்கள். பெட்டி பாம்பு மாதிரி என்னை வைத்திருந்தார்கள். இதெல்லாம் எனக்கு தெரிகிறது. அப்பா, அம்மா கொடுத்த அறிவால் அது தெரிகிறது. ஆனால் அவர்கள் வளர்த்த விதம் என்னை காலி செய்துகொண்டே இருந்தது. முதுகில் குத்துகிறார்கள் என்றும் தெரியும். மாறிடுவார்கள் என்று எத்தனையோ நாட்கள் நினைத்தேன். வீட்டில் மரியாதை இல்லை என்றால் எப்படி. நான் கேட்பது அடிப்படைதானே. வேலைக்கு போய்விட்டு வந்தால் நிம்மதியே இருக்காது. நிறைய ஆதாரங்களை ஏஐயில் க்ரியேட் செய்து வைத்திருப்பார்கள். எனது பிள்ளைகளைகூட அவர்கள் பார்க்க விடுவதில்லை" என பல விஷயங்களை சொல்லி கதறியிருந்தார்.
மறுத்த மாமியார்: ரவி மோகனின் அந்த பகீர் குற்றச்சாட்டுக்களை எல்லாம் தயாரிப்பாளரும், ரவியின் மாமியாருமான சுஜாதா திட்டவட்டமாக மறுத்திருந்தார். நடிகை குஷ்பூவும் ஆர்த்திக்கு சப்போர்ட் செய்திருந்தார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார் ரவி. அவரது முகத்தில் முன்னர் இருந்த எந்த உற்சாகமும் இந்த முறை தென்படவில்லை. இந்நிலையில் ரவி விஷயம் குறித்து பெண் சாமியார் ஒருவர் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பெண் சாமியார் பேட்டி: அந்த பெண் சாமியார் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "என்னுடைய ஆலயத்துக்கு அவர் வந்தால் என்னால் சரி செய்ய முடியும். அவரை பழையபடி ஹீரோவாக மாற்ற முடியும். ஒரு நெகட்டிவ் வெளியே போனால்தான் பாசிட்டிவ் உள்ளே வரும். ஏசி போட்ட ரூமில் அசுத்தம் இருந்தால் அந்த அசுத்தத்தின் வாடைதான் வரும். அசுத்தம் என்பது செய்வினை பிரச்னை. அதை க்ளியர் செய்யும்போது அனைத்தும் நன்றாக நடக்கும். குடும்பம் மீண்டும் ஒன்று சேரும், பட வாய்ப்புகள் எல்லாம் வரும். அவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சமந்தாவுக்கும் செய்வினை வைத்திருந்தார்கள். அதை அவர் சரி செய்துவிட்டார். இதுமாதிரி அனைத்துக்கும் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
