»   »  பெண்கள் செக்ஸுக்கு மட்டுமே லாயக்கு: பிரபல நடிகர் திமிர் பேச்சு

பெண்கள் செக்ஸுக்கு மட்டுமே லாயக்கு: பிரபல நடிகர் திமிர் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பெண்களால் மனஅமைதி பாதிக்கப்படுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் படுக்கைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று பிரபல தெலுங்கு நடிகர் சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தனது மகன் நாக சைதன்யா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரை வைத்து தயாரித்துள்ள ராரண்டோய் வேதுகா சுதம் பட நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல தெலுங்கு நடிகர் சலபதி ராவ்(73) பெண்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

 பெண்கள்

பெண்கள்

பெண்களால் மன அமைதி கெடும் என்று படத்தில் நாக சைதன்யா வசனம் பேசியுள்ளார். அது உண்மையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் படுகைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

சலபதி ராவின் பேச்சை கேட்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்து வெட்கி தலைகுனிந்தனர். சலபதி ராவ் பேசியது சில தெலுங்கு சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

நாகர்ஜுனா

சலபதி ராவ் பேச்சு குறித்து நாகர்ஜுனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் தனிப்பட்ட முறையில் மற்றும் என் படங்களில் எப்பொழுதுமே பெண்களை மதிப்பவன். நான் சலபதி ராவின் பேச்சை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அலி நடிகை அனுஷ்காவின் தொடையை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior telugu actor Chalapathi Rao said women are good only for sleeping with men at a movie function held in Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil