மகளிர் தினம்: இனி என் படங்களில் ஹீரோயின் பெயர் தான் ஃபர்ஸ்ட் வரும்- ஷாருக்கான்
மும்பை: மகளிர் தினத்தையொட்டி ஷாருக்கான் ஒரு உறுதிமொழியை எடுத்துள்ளார். அதாவது இனி தன் படங்களில் பெயர் போடுகையில் முதலில் ஹீரோயின் பெயரை போட வைக்கப்போகிறாராம்.
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலக தலைவர்கள் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நாளில் பாலியல் வன்கொடுமைகளை களைய போராடுவோம் என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாளையொட்டி பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் ஒரு உறுதிமொழி ஏற்றுள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னால் முடிந்த ஒன்றை அவர் செய்வதாக அறிவித்துள்ளார்.

இனி ஹீரோயின் பெயர் தான் ஃபர்ஸ்ட்
இனிமேல் என் படங்களில் பெயர் போடும்போது முதலில் ஹீரோயின் பெயர் போடப்படும். அதன் பிறகு தான் என் பெயர் வரும் என்றார் ஷாருக் கான்.

சென்னை எக்ஸ்பிரஸில் இருந்து...
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முதலில் தீபிகா படுகோனே பெயர் வரும்படி பார்த்துக் கொள்வேன். இதில் இருந்து என்னுடைய அனைத்து படங்களிலும் ஹீரோயின் பெயர் தான் முதலில் வரும் என்றார் ஷாருக்.

தீபிகா என்ன சொன்னார்...
தன் பெயர் படத்தில் முதலில் வருவது பற்றி அறிந்து தீபிகா ஒன்றும் துள்ளிக் குதிக்கவில்லை. கிரேட். இது போன்று பிறரும் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக ஷாருக் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











