இனி என் மனைவி ஐஸ்வர்யாவின் படத்தில் நடிக்க மாட்டேன், ஏன் என்றால்..: தனுஷ்

By Siva

சென்னை: இனி மனைவி ஐஸ்வர்யாவின் படத்தில் நடிக்கப் போவது இல்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

தந்தை கஸ்தூரி ராஜா மூலம் கோலிவுட்டில் ஹீரோவானவர் தனுஷ். அவர் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்த 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். படத்தில் ஐஸ்வர்யாவின் தோழியும், கமல் ஹாஸனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹீரோயினாக நடித்தார்.

இந்நிலையில் தனுஷ் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

இனி மனைவி ஐஸ்வர்யாவின் படத்தில் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் தனுஷ்.

வை ராஜா வை

வை ராஜா வை

ஐஸ்வர்யா கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை எடுத்து வருகிறார். கவுதமுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். நீண்ட காலம் கழித்து இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் காயத்ரி ரகுராம். அதாங்க பிரபு தேவாவுடன் சேர்ந்து சும்மா சும்மா பாட்டுக்கு ஆடினாரே அதே காயத்ரி தான்.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

தனுஷ் மனைவி இயக்கும் படங்களை தயாரிப்பாராம் ஆனால் நடிக்க மாட்டாராம். ஏன் என்றால் தயாரிப்பது தான் அவருக்கு வசதியாக உள்ளதாம்.

ஷமிதாப்

ஷமிதாப்

தனுஷ் தற்போது ஸ்ருதியின் தங்கை அக்ஷரா ஹாஸன், அமிதாப் பச்சனுடன் சேர்ந்து ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தி

இந்தி

தனுஷ் தனது முதல் இந்தி படமான ராஞ்ஹனாவில் இந்தியில் பேச கஷ்டப்பட்டார். ஆனால் ஷமிதாபில் அவருக்கு வாய் பேச முடியாத கதாபாத்திரம் என்பதால் இந்தியில் பேசும் பிரச்சனை இல்லை என்றார் தனுஷ்.

பிரேசில்

பிரேசில்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணி வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X