மக்கள் செல்வன் மனுஷனே கிடையாது.. கைவசம் இப்பவே 10 படங்கள்.. ஜெயிலர் 2 பற்றி ஓபன் டாக்!
சென்னை: விஜய் சேதுபதி வசனமே பேசாமல் நடித்த காந்தி டாக்ஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்து முத்து என்கிற காட்டான் வெப்சீரிஸ் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அவரது கைவசம் 9 படங்கள் மற்றும் 1 வெப்சீரிஸ் என மொத்தமாக 10 புராஜெக்ட்கள் உள்ள லைன் அப்பை ஓபனாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் எல்லாம் வருடத்துக்கு ஒரு படம் பண்ணவே யோசித்து வரும் நிலையில், தனுஷ் மட்டுமே 6 முதல் 7 புராஜெக்ட்களை கைவசம் வைத்துள்ளார். ஆனாலும், அவர் ஒவ்வொன்றாகவே வேகமாக வேலை செய்து முடித்து வருகிறார்.

ஆனால், மக்கள் செல்வன் எல்லாம் மனுஷனே கிடையாது என்கிற மோடில் தான் வேலை பார்த்து வருகிறார். வீட்டுக்குப் போவாரா? குடும்பத்தை பார்ப்பாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
கைவசம் 10: மிஸ்கின் இயக்கத்தில் ஏற்கனவே பிசாசு 2 மற்றும் ட்ரெயின் என 2 படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 2 படங்களும் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் படத்தையும் நடித்து முடித்து விட்டார். அந்த படமும் கூடிய விரைவில் வெளியாக போகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, வெற்றிமாறனின் அரசன், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், மகாராஜா 2 மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் ஒட்டுமொத்தமாக 10 புராஜெக்ட்கள் உள்ளதாக கூறியுள்ளார்.
பிக் பாஸ் வேற: சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மனுஷன் சாப்பிடுகிறாரா? தூங்குறாரா? மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கிறாரா? என்கிற கேள்விகள் மிகப்பெரியதாக எழுந்துள்ளது. சினிமாவுக்கு எந்தளவுக்கு சின்சியராக இருக்க வேண்டும் என்பதை மற்ற நடிகர்கள் விஜய் சேதுபதியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றே கூறுகின்றனர்.
ரஜினிகாந்த் பற்றி: ஜெயிலர் 2 படத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினி சார் இந்த வயதிலும் எப்படி உழைக்கிறார் என்பதை பார்த்தால், நானெல்லாம் ஒண்ணுமே பண்ணல என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. வெளியே ரசிகனாக இருந்து பார்த்த வரைக்கும் ரஜினிகாந்த் சார் ஒரு நடிகர் மட்டும் தான். ஆனால், சினிமாவில் ஒரு அங்கமாக மாறிய பின்னர், அவர் போன்ற லெஜண்டுகள் எல்லாம் எப்படி திட்டமிடுகின்றனர். எப்படி வேலை பார்க்கின்றனர் என்பதை பார்த்தாலே வியப்பாகவும் நாம இன்னமும் அதிகம் படிக்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிறது என ரொம்பவே தன்னடக்கத்துடன் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











