சிம்புவுக்கு டயலாக் பேப்பர் எடுத்துக் கொடுத்தவர் இன்று பெரிய ஹீரோ #MondayMotivaton

By Siva

Recommended Video

சிவாவை பாராட்டும் அருண்ராஜா | தனுஷுடன் நடிச்சா இது தான் பிரச்சனை- வீடியோ

சென்னை: வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுக்கு வசன பேப்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்தார் சிவகார்த்திகேயன் என்று அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.

பாடல் ஆசிரியராக மாஸ் காட்டி வரும் அருண்ராஜா காமராஜ் கனா படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

அவர் இயக்குனராகியுள்ள படத்தை அவரின் நண்பன் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பெண்கள் கிரிக்கெட், விவசாயம் மற்றும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள கனா படம் பெண்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. குடும்ப ரசிகர்களை கவர்ந்துவிட்டார் அருண்ராஜா. நண்பனுக்காக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது வீண் போகவில்லை.

உதவி இயக்குனர்கள்

உதவி இயக்குனர்கள்

அருண்ராஜா காமராஜும், சிவகார்த்திகேயனும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவியாளர்களாக இருந்துள்ளனர். நெல்சன் சிம்புவை வைத்து எடுத்த வேட்டை மன்னன் படத்தில் இருவரும் வேலை செய்துள்ளனர். சிம்புவுக்கு வசன பேப்பரை கொடுக்கும் வேலை சிவகார்த்திகேயனுக்கு. டயலாக் பேப்பர் கொடுத்தவர் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ளார்.

வேட்டை மன்னன்

வேட்டை மன்னன்

வேட்டை மன்னன் படம் துவங்கிய வேகத்தில் நின்றதற்கான காரணம் தங்களுக்கே இதுவரை தெரியவில்லை என்கிறார் அருண்ராஜா காமராஜ். அந்த படம் நின்ற பிறகு நொந்துபோன அருண்ராஜா வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று யோசித்த நிலையில் தான் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து அந்த பக்கம் சென்றுள்ளார்.

ஆசை

ஆசை

படம் இயக்க வேண்டும் என்ற அருண்ராஜா காமராஜின் ஆசை சிவகார்த்திகேயனுக்கு தெரியும். கனா படம் மூலம் அவரின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். சினிமாவில் வளர்ந்து பெரிய ஆளாகி நண்பனின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் பிசியாகிவிட்டார் சிவா.

இன்ஸ்பிரேஷன்

இன்ஸ்பிரேஷன்

உதவி இயக்குனராக இருந்து, ஹீரோவுக்கு நண்பனாக நடித்து பின்னர் ஹீரோவான சிவகார்த்திகேயனை சினிமா ஆசையுடன் சென்னைக்கு வருபவர்கள் இன்ஸ்பிரேஷனாக நினைக்கிறார்கள். அதிகாலை காட்சி வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் சும்மாவா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X