அந்த நடிகரின் நடிப்பை பார்த்து அழுத ரஜினிகாந்த்.. அட இப்படி வேற நடந்திருக்கா?
சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை 170 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களே. இடையில் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்து ட்ரோல்களையும், விமர்சனத்தையும் பெற்றன. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட் ஆகினர். மேலும் இத்தனை வருடங்களாக ரஜினி வசம் இருந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி அவரிடமிருந்து சென்றுவிடுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

தட்டி தூக்கிய ஜெயிலர்: ஆனால் அந்த சீன்லாம் இல்லை என்று ஜெயிலர் படம் உணர்த்தியது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினிக்கு ஏற்றபடி சீன்கள், திரைக்கதை என ஒவ்வொரு விஷயத்தையும் நெல்சன் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். இதன் காரணமாக படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார். படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. ஜெயிலரில் பிடித்ததை இதில் விட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர். இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் வேட்டையன் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பட்டையை கிளப்புவார்: ஞானவே இயக்கிய முதல் படமான ஜெய் பீம் பெரும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த்துக்காக இயக்குநர் தரமான சம்பவம் செய்வார் என்று கூறும் ரசிகர்கள்; இது கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்டிப்பாக மக்களுக்கும், சமூகத்துக்கு தேவையான கருத்தைத்தான் சொல்லும்வகையில் அமைந்திருக்கும் என்கின்றனர். படத்தின் டைட்டில் டீசர் நல்ல வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
ஒய்.ஜி. மகேந்திரன் பேட்டி: இந்நிலையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் ரஜினி குறித்து சமீபத்திய பேட்டியில் பேசுகையில், "ஷாமா ராகம் என்ற ஒரு மலையாள படத்தில் நான் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் எனது நடிப்பை பார்த்து ரஜினிகாந்த் அழுதுவிட்டார். ஆனால் ஒன்று அந்தப் படம் எடுக்கப்பட்ட 4 வருடங்கள் ஆகியும் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. ரஜினி ஒரு நல்ல ரசிகர். நாங்கள் நாடகம் போடும்போது அடிக்கடி வருவார். அதேபோல் அவருக்கு ஒரு காட்சி பிடித்துவிட்டால் எழுந்து நின்று கைத்தட்டி ரசிப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











