அந்த வசனம் மட்டும் இருந்தால் விசில் பறக்கும்.. GOAT படம் பற்றி ஒய்.ஜி.மகேந்திரன் ஷேரிங்ஸ்

சென்னை:கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகும் சூழலில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. சில படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நட்பு, கிரிக்கெட் ஆகியவைகளை மையமாக வைத்து படு ஜாலியாக அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அவர். படமும் மெகா ஹிட்டானது. முக்கியமாக முதல் பட இயக்குநர் போன்றே அவர் பணியாற்றவில்லை. அனுபவம் மிக்க இயக்குநர் போல் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

Vijay GOAT

அடுத்தடுத்த ஹிட்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக சரோஜா படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக த்ரில்லர் ஜானரிலும் தான் கைதேர்ந்தவர் என்பதை வெங்கட் பிரபு அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து அவர் இயக்கிய கோவா படம் தோல்வியடைந்தது. படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் படம் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது என்றும்; ரொம்பவே கேஷுவலாக படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே கூறினர். அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா படம் மெகா ஹிட்டானது.

GOAT: மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.

ட்ரெய்லர் ரிலீஸ்: படத்திலிருந்து வெளியான மூன்று சிங்கிள்களுமே சுமாரான வரவேற்பை பெற்றன. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகமடைந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள், வெங்கட் பிரபு கலக்கிட்டார். அவரை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம் என்று கூறி தங்களது பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்தனர் .
ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி: இந்நிலையில் கோட் படம் பற்றி அதில் கெஸ்ட் ரோல் செய்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் அளித்த சமீபத்திய பேட்டியில், “வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தேன். இப்போது கோட் படத்திலும் நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் ஒரு காட்சியில்தான் நடித்திருக்கிறேன். ஆனால் அந்தக் காட்சியில் நான் பேசும் ஒரு வசனத்தில் தியேட்டரில் விசில் பறக்கும். அதை கட் பண்ணாமல் வைத்தால் கண்டிப்பாக பெரிய லெவலில் ரீச் ஆகும்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X