அடியாத்தி 24 கோடிக்கு பீச் ஹவுஸ் வாங்கிய யஷ்.. மனைவியுடன் ஜாலியா அலிபாக்கில் செட்டிலா?
மும்பை: நடிகர் யஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் தம்பதியினர் மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில், கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு நிலத்தை ₹24 கோடிக்கும் அதிகமான விலையில் கூட்டாக வாங்கியுள்ளனர். தங்கள் விடுமுறைக்கால வீடு கட்டும் நோக்கில் இந்த நிலத்தை அவர்கள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1.75 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த நிலம் மே 30, 2024 அன்று பதிவு செய்யப்பட்டது. இதற்காக ₹1.44 கோடி முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்பட்டது. யஷ் (நவீன் குமார் கௌடா) மற்றும் ராதிகா பண்டிட் ஆகியோர் கோட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் போர்க்கரிடமிருந்து இந்தச் சொத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாக்ஸிக் திரைப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் ராமயாணா படத்தில் ராவணனாக யஷ் நடித்துள்ளார். அதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ள நிலையில், பாலிவுட் சினிமாவை குறிவைத்து இப்படி அலிபாக் பக்கம் நகர்கிறாரா யஷ் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கடற்கரையோர சொத்து: பெரும் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அலிபாக் தற்போது சொகுசு விடுமுறை இல்லங்கள் மற்றும் இரண்டாம் வீடுகளுக்கான விருப்பமான இடமாக உருவெடுத்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இத்தகைய முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
யஷ்-ராதிகா தம்பதியைத் தவிர, பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன்-ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா-விராட் கோலி, தொழிலதிபர் கௌதம் சிங்கானியா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மற்றும் அடார் பூனாவல்லா உள்ளிட்ட பலரும் அலிபாகில் முதலீடு செய்துள்ளனர். செப்டம்பர் 2022-ல், தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் தம்பதியினர் சதிர்ஜே கிராமத்தில் 2.25 ஏக்கர் நிலத்தை ₹22 கோடிக்கு வாங்கினர்.
தீபிகா படுகோன் முதல் பல பிரபலங்கள்: அதே செப்டம்பர் 2022-ல், அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி தம்பதியினர் ஜிரத் கிராமத்தில் 6 ஏக்கர் நிலத்தை ₹19.24 கோடிக்கு வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்தனர். முன்னதாக 2021-ல், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, அலிபாகின் மாண்ட்வா பகுதியில் ₹5 கோடிக்கு 4-BHK பண்ணை வீட்டை வாங்கினார்.
ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள், தனியுரிமை, ஆடம்பரம் மற்றும் மும்பைக்கு அருகாமை வழங்கும் சொத்துக்களை நாடும் செல்வந்தர்கள் மத்தியில் அலிபாகில் விடுமுறைக்கால வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications