ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறார் யாஷ்?.. வெளியான சூப்பர் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
பெங்களூரு: கன்னட திரையுலகில் தற்போது சென்சேஷனல் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் யாஷ். அவர் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் வசூல் சாதனையை படைத்தது. முக்கியமாக கேஜிஎஃப் 2 தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வெளியாகி பந்தயம் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் டாக்சிக் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
கன்னட தொலைக்காட்சி சேனல்களில் நடித்தவர் யாஷ். பிறகு சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே சினிமாவில் நிலைப்பதற்கு நடிகர் யாஷ் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தவர். எந்த ஒரு திருப்புமுனையும் இன்றி தவித்திருந்த அவர் தமிழில் வெளியான களவாணி படத்தை ரீமேக் செய்து நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே எப்படியாவது ப்ரேக் த்ரூ பெற்றுவிட வேண்டும் என காத்திருந்தார் யாஷ்.

கேஜிஎஃப்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2018ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஎஜிஃப் படம் வெளியானது. இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தை ஏற்றார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டிய யாஷுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதேபோல் அவருக்கென்று ரசிகர்களும் உருவாகத் தொடங்கினார். யாஷ் பேசும் ஒரு வசனத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வந்தன. படமும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது.
ராக்கி பாய்: முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வருடம் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். ராக்கி பாய் மிகப்பெரிய டானாக மாறிய பிறகு நடக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டிருந்தது. முதல் பாகத்தைவிட கேஜிஎஃப் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வசூலிலும் மிரட்டியது. மேலும் சண்டை காட்சிகள் எல்லாம் சர்வதேச தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.
வசூல் சக்கரவர்த்தி: பொதுவாக கன்னட திரையுலகம் எப்போதும் பெரிதாக இந்திய அளவில் பேசப்படாது என்ற நிலைமைதான் நீடித்தது. ஆனால் அந்த நிலைமையை சமீபத்தில் வெளியான படங்கள் மாற்றிக்கட்டிக்கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய விதை போட்டது என்றால் யாஷ் நடித்த கேஜிஎஃப் படம்தான். குறிப்பாக அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் ரூல் செய்தது. அதிலும் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக களமிறங்கி அந்தப் படத்தை ரோஸ்ட் செய்து பந்தயம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
டாக்சிக்: அவர் தற்போது டாக்சிக் என்ற படத்தில் நடித்துவருகிறார். கண்டிப்பாக கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்கள் போலவே இந்தப் படமும் இந்திய அளவில் மெகா ஹிட்டாகி வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அவர் ஹிந்தியில் ராமாயணா படத்தின் மூலம் எண்ட்ரி ஆகியிருக்கிறார். அந்தப் படத்தை நிதிஷ் திவாரி இயக்குகிறார்.
ஷாருக்கானுடன்: இந்நிலையில் யாஷ் இன்னொரு ஹிந்தி படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அவர் நடிக்கவிருப்பதாகவும் அதற்காக நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு பேருமே ஒத்துக்கொண்டார்கள் என்றும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் இரண்டு பேருக்குமே ரசிகர்கள் அதிகம் என்பதால் நம்பி வருபவர்களை ஒரு சதவீதம்கூட ஏமாற்றிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே சரியான கதைக்காக காத்திருக்கிறார்கள் என்றும் பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











