கர்ப்பமாக இருக்கும் ஹீரோயின்.. கேஜிஎஃப் ஹீரோ யஷ் என்ன செஞ்சிருக்காரு பாருங்க.. சூப்பர் மனது
பெங்களூரு: கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் யஷ். ஆரம்பத்தில் தடுமாற்றங்களை சந்தித்துக்கொண்டிருந்த அவருக்கு இந்த இரண்டு படங்களும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்போது அவர் டாக்ஸிக் படத்தில் நடித்துவருகிறார். இதனை நடிகை கீது மோகன் தாஸ் இயக்கிவருகிறார். இந்நிலையில் நடிகை கியாரா அத்வானிக்காக யஷ் செய்திருக்கும் செயல் பலரிடமும் பாராட்டை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
சினிமாவில் வெல்ல வேண்டும் என்ற கனவோடு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர் யஷ். எப்படியாவது பெரிய ஹீரோவாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. தமிழில் மெகா ப்ளாக் பஸ்டர் அடித்த களவாணி படத்தை கன்னடத்தில் ரீமேக் எல்லாம் செய்து நடித்தார். ஆனால் அந்தப் படமும் அவருக்கு தோல்வியை சந்தித்தது.
கேஜிஎஃப் மெகா ஹிட்: தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எல்லாம் ஒன்று தோல்வி இல்லை சுமார் என்ற ரீதியிலேயே அமைந்துகொண்டிருந்த சூழலில்தான் கடந்த 2018ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஎஜிஃப் படத்தில் நடித்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டிய யஷ்ஷுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதேபோல் அவருக்கென்று ரசிகர்களும் உருவாகத் தொடங்கினார்கள். படமும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது.

சலாம் ராக்கி பாய்: முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2022ஆம் வருடம் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். ராக்கி பாய் மிகப்பெரிய டானாக மாறிய பிறகு நடக்கும் சம்பவங்க்ளை வைத்து கதை அமைக்கப்பட்டிருந்தது. முதல் பாகத்தைவிட கேஜிஎஃப் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வசூலிலும் மிரட்டியது.
வசூல் சக்கரவர்த்தி ராக்கி: பொதுவாக கன்னட திரையுலகம் எப்போதும் பெரிதாக இந்திய அளவில் பேசப்படாது என்ற நிலைமைதான் நீடித்தது. ஆனால் அந்த நிலைமையை சமீபத்தில் வெளியான படங்கள் மாற்றிக்கட்டிக்கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய விதை போட்டது என்றால் கேஜிஎஃப் படம்தான். இந்த இரண்டு படங்களின் வெற்றியும் யஷ்ஷை ஒரு பான் இந்திய ஹீரோவாக உயர்த்தி; பெரிய பிரபல்யத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸிக்: கேஜிஎஃப் 2 படத்துக்கு பிறகு டாக்ஸிக், ராமாயணா ஆகிய படங்களில் நடித்துவருகிறார் அவர். இவற்றில் டாக்ஸிக் படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிவருகிறார். இவர் தமிழில் நள தமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் யஷ்ஷுடன் நயன்தாரா, ஹுயுமா குரேஷி, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
யஷ் செய்தது: இந்நிலையில் நடிகை கியாரா அத்வானி கர்ப்பமாக இருக்கிறார். இதன் காரணமாக அவரால் டாக்ஸிக் ஷூட்டுக்கு கர்நாடகாவரை வர முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனவே அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு படத்தின் மீத ஷூட்டிங் முழுவதையும் மும்பைக்கு ஷிஃப்ட் செய்ய யஷ் இயக்குநரிடம் கேட்டுக்கொண்டதாகவும்; அதற்கு இயக்குநரும் ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட யஷ்ஷுக்கு தங்கமான மனசு என்று பாராட்டிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











