வேகமாக பரவும் ராக்கிங் ஸ்டார் ஸ்டில்.. திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வழிபட்ட 'கே.ஜி.எஃப்' ஹீரோ யஷ்!

By

சென்னை: 'கே.ஜி.எஃப்' ஹீரோ யஷ், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வழிபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கன்னடத்தில் வெளியான மொக்கின மனசு என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், யஷ்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், ரூபா ஐயர் இயக்கிய 'சந்திரா' மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

பான் இந்தியா

பான் இந்தியா

இவர் நடித்த 'கே.ஜி.எஃப்' படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ஹிட்டானதால், இந்தியா முழுவதும் அறியப்பட்டார் யஷ். இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்து வருகிறார். இதுவும் பான் இந்தியா முறையில் ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

ஶ்ரீனிதி ஷெட்டி

ஶ்ரீனிதி ஷெட்டி

இந்நிலையில் அதில் இருந்து குணமடைந்து இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார். இந்தப் படத்தில் ரவீனா டாண்டன், ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்குப் பிறகு இதன் ஷூட்டிங், கடந்த அக்டோபர் மாதம் மங்களூரில் மீண்டும் தொடங்கியது.

எதிர்பார்க்கும் ஃபேன்ஸ்

எதிர்பார்க்கும் ஃபேன்ஸ்

இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. சமீபத்தில், இதன் ஷூட்டிங் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கூறி இருந்தார். ரசிகர்கள் அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சனீஸ்வரன் கோயில்

சனீஸ்வரன் கோயில்

இந்நிலையில், நடிகர் யஷ், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அவருடன் கர்நாடக மாநில துணை முதல்வர், அஷ்வத் நாராயணனும் சென்று வழிபட்டுள்ளார். அவர் அந்த கோயிலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X