பிளாஷ்பேக் 2018: பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறாரே இந்த விஜய்

By Siva

சென்னை: விஜய் தேவரகொண்டா பிழைக்கத் தெரியாத ஆளாக உள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் கோலிவுட் வந்தார். ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா படத்தில் விஜய் தேவரகொண்டா அரசியல்வாதிகளை கெட்ட வார்த்தையால் திட்டினார்.

தமிழகத்தில் நிஜத்தில் நடந்த சில சம்பவங்களை படத்தில் காட்டியிருந்தனர்.

கிண்டல்

கிண்டல்

தமிழக அரசியலில் நடந்த, நடக்கின்ற சில சம்பவங்களை படத்தில் கிண்டல் செய்திருந்தார்கள். தலைவரின் முகத்தை கூட பார்க்காமல் குனிந்து கும்பிடும் காட்சி வந்தபோது அரங்கமே அதிர்ந்தது. சிலை செய்கிறேன் என்று யார் முகத்தையோ வைத்ததை கூட விமர்சித்திருந்தார்கள்.

இலவச விளம்பரம்

இலவச விளம்பரம்

ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் ஆட்டம் போட்டது, அவர்களுக்கு பணம் கொடுப்பது என்று ஏகப்பட்ட காட்சிகள் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருந்தன. ஆனால் யாருமே எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுக்கவில்லை. டம்மி முதல்வர் என்றால் அதற்காக இந்த அளவுக்கு டம்மியா என்று மக்கள் கேட்ட கேள்வியை கூட படத்தில் வைத்திருந்தனர்.

பேச்சு

பேச்சு

நோட்டா படத்திற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் அந்த தவறை செய்துள்ளார்கள் என்று அர்த்தம் என விஜய் தேவரகொண்டா பட ரிலீஸுக்கு முன்பு தெரிவித்தார். அவர் சொன்னதாலோ என்னவோ யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இல்லை என்றால் சர்காரை விட இந்த படத்திற்கு தான் கண்டமேனிக்கு எதிர்ப்பு கிளம்பி இலவச விளம்பரம் அமோகமாக கிடைத்திருக்கும்.

தேவரகொண்டா

தேவரகொண்டா

இலவச விளம்பரம் கிடைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டாக வேண்டிய படத்தை தேவையில்லாமல் அப்பாவித்தனமாக பேசி அதை தடுத்துவிட்டார் விஜய் தேவரகொண்டா. ஆளாளுக்கு இலவச விளம்பரம் பெற துடிக்கும்போது வந்த விளம்பரத்தை வாசலோடு நிறுத்தி அனுப்பி வைத்துவிட்டாரே விஜய். பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறாரே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X