காக்டெய்ல் படத்தில் ஹீரோ ஆன யோகிபாபு: ஹீரோயின் யார் தெரியுமா?
Recommended Video

சென்னை: காக்டெய்ல் படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார்.
வடிவேலு பிரச்சனைகளில் சிக்கி நடிக்க முடியாமல் உள்ளார், சந்தானமோ நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் யோகிபாபுவின் காட்டில் அடைமழை தான்.
யோகிபாபுவை தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அவரின் கால்ஷீட் டைரி நிரம்பிக் கொண்டிருக்கிறது.

யோகிபாபு
இந்த மூஞ்சிக்கெல்லாம் ஹீரோ செட்டாகுமா என்று கேட்ட யோகிபாபு ஹீரோவாகிவிட்டார். அவரை ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் காக்டெய்ல் என்ற படத்தில் அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இயக்குநர்
புதுமுக இயக்குநர் முருகன் இயக்கும் காக்டெய்ல் படத்தில் ஆஸ்திரேலிய பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. மனோபாலா, சாயாஜி ஷிண்டே, மைம்கோபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

முத்தையா
காக்டெய்ல் படத்தை இயக்குநர் பி.ஜி. முத்தையா தயாரிக்கிறார். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படத்தில் முருகன் சிலைக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறார் முத்தையா.

ஹீரோயின்
காக்டெய்ல் படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை நடிக்கிறாராம். நாய்களுக்கு முடிவெட்டும் கடை வைத்திருப்பவராக நடிக்கிறாராம் யோகிபாபு. ஜி.வி. பிரகாஷின் உதவியாளரான சாய் பாஸ்கர் காக்டெய்ல் படம் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











