நிஜமாவே யோகக்காரன் தான்யா நீ.. ரெண்டு தல.. மேல அஜித் குமாரை வச்சு உஷாரா தப்பித்த யோகி பாபு!
சென்னை: யோகி பாபுவுக்கும் அஜித் குமாருக்கும் பிரச்சனை என்பது போல சில யூடியூப் சேனல்களில் சர்ச்சைகள் சில மாதங்களுக்கு முன்னர் வெடித்தன. அதெல்லாம் சுத்த பொய் என யோகி பாபு பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், குட் பேட் அக்லி படம் வெளியான நிலையில், அஜித் குமார் மற்றும் தோனியுடன் தான் இருக்கும் வீடியோக்களை ஒன்றாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்த நடிகர்களிலேயே இந்தி வரைக்கும் சென்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த பெருமை யோகி பாபுவுக்குத்தான் அடித்துள்ளது. முருகரை வணங்கிக் கொண்டே தனக்கு கிடைக்கும் படங்களில் காமெடி நடிகராகவும் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

ஓடிடியில் ஒரு படம் விற்க வேண்டும் என்றால், அதில் ஒரு சீனிலாவது யோகி பாபு வந்தால் போதும் என பல சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை யோகி பாபுவிடம் ஒரு நாள் கால்ஷீட்டாவது வாங்கிக் கொண்டு நடிக்க வைத்து வருகின்றனர்.
நம்பர் ஒன் காமெடி நடிகர்: தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் எல்லாம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த நிலையில், காமெடியில் கலக்கத் தொடங்கினார் யோகி பாபு. மண்டேலா உள்ளிட்டபடங்களில் ஹீரோவாகவும் நடித்து நடிப்பிலும் ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். டாக்டர் படத்தில் அரை கை ஆட்டத்தை எல்லாம் கொண்டு வந்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். ஹீரோவாக நடித்தாலும் காமெடியனாகவும் யோகி பாபு தொடர்வது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் படத்தில்: தமிழ் சினிமாவை தாண்டி பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் யோகி பாபு. ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் உள்ளிட்ட இந்தி படங்களிலும் இவர் நடித்து இந்தியளவில் தனக்கான ரசிகர்களை உருவாக்கி வருகிறார். யோகி பாபு கால்ஷீட் கிடைக்க மாட்டேங்குது என ஷாருக்கான், தோனி எல்லாம் புலம்பும் அளவுக்கு பிசியான ஆளாக வலம் வருகிறார்.
தோனி படத்தில்: தமிழில் தோனி தயாரித்த எல்ஜிஎம் படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா மற்றும் இவானாவுடன் இணைந்தும் இவர் நடித்துள்ளார். சினிமாவைத் தாண்டி விளையாட்டிலும் ஆர்வமுடையவர் யோகி பாபு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
குட் பேட் அக்லியில் செம சீன்: ஏகே வராரு வழிய விடுங்கடா என டிரைலரிலேயே யோகி பாபு பேசிய வசனம் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியது. குட் பேட் அக்லி படத்தில் ஒரே ஒரு சீனில் மட்டுமே யோகி பாபு வந்தாலும், ரசிகர்களை கவரும் வண்ணம் அந்த காட்சி இடம்பெற்ற நிலையில், தற்போது அந்த சீனையும் தோனியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோவையும் ஒன்றாக எடிட் செய்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ரொம்பவே உஷாராக தோனி வீடியோவை கீழேயும் அஜித் வீடியோவை மேலே வைத்து எடிட் செய்த விதத்தில் அஜித் ரசிகர்களிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.
தோனியை திட்டும் ரசிகர்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில், கடவுள் என கத்திக் கூச்சலிட்டு வந்த ரசிகர்கள் எல்லாம் தற்போது அவர் ஆடவே தேவையில்லை என திட்டி வருகின்றனர். ஆர்சிபி ரசிகர்கள் கூட இந்தளவுக்கு மோசமானவர்களாக மாறவில்லை என்றும் ஹார்ட்கோர் தோனி ரசிகர்கள் கூறி வரும் நிலையில், அதை நினைவுப்படுத்தும் விதமாக யோகி பாபு இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











