நல்லவேளை… அவர் உயிரோடு இல்லை… யோகிபாபுவின் கலகல பேச்சு !
சென்னை : கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் டிக்கிலோனா,
இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜீ5 OTT தளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.
இப்படம் ஒடிடியில் வெளியானதை அடுத்து, டிக்கிலோனா படக்குழுவினர் ஒன்றாக இணைந்து டிவிட்டர் ஸ்பேசில் பேசினர். அப்போது பேசிய யோகி பாபு படம் குறித்து நகைச்சுவையாக கலகலப்பாக பேசினார்.

டிக்கிலோனா
டைம் டிராவல் கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. சமீபத்தில் இன்று நேற்று நாளை வெளியாகி மெஹா ஹிட் அடித்தது. அது மாதிரியான ஒரு கதையில் காமெடி கலந்து கொடுத்திருக்கிறது டிக்கிலோனா. அந்த வகையில் இது ஒரு காமெடி டைம் டிராவல் திரைப்படம்.

3 கெட்டப்பில் சந்தானம்
சந்தானம் உடல் எடையை குறைத்து புது எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால் அளவுக்கு அதிகமாக எடையைக் குறைத்ததால் முகம் எல்லாம் வாடிப் போனது போல இருக்கிறது. விரைவில் மீண்டு விடுவார். மூன்று கெட்டப்கள். மூன்றிலும் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்கிறார்.

டைம் டிராவல்
தேசிய ஹாக்கி வீரர் ஆகும் கனவில் இருக்கும் சந்தானம், அனாகாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். காதலின்போது இனித்த வாழ்க்கை, திருமணத்திற்குப் பிறகு கசக்க துவங்குகிறது. இதனால், 2020இல் தனக்கு நடந்த திருமணத்தை நிறுத்திவிட்டு வாழ்க்கையை சரி செய்ய கடந்த காலத்துக்குச் செல்கிறார். அதேசமயம் கடந்த காலத்தில் இருக்கும் திருமணமாகாத சந்தானத்தை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறார். இருவரும் மாறி மாறி அந்தந்த காலக்கட்ட வாழ்கையை அனுபவிக்கிறார்கள். இதையடுத்து கடந்த காலத்துக்குச் சென்ற ஈ.பி. சந்தானம் திருமணத்தை நிறுத்தினாரா, இல்லையா? என்பதே கதை.

யோகிபாபு
இதில், நடிகர் யோகி ஷாக் அடித்து விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக மாறுகிறார். கால இயந்திரத்திற்கான ஃபார்முலாவையும் யோகி பாபு சொல்ல ஆடை இல்லாமல் சந்தானம் டைம் டிராவல் செய்கிறார். இந்நிலையில் நேற்று டிவிட்டர் ஸ்பேசில் டிக்கிலோனா படக்குழுவினர் ஒன்றாக இணைந்து பேசினார். அப்போது பேசிய யோகிபாபு, என்னைய போய் ஐன்ஸ்டீனா நடிக்க வெச்சிருக்காங்க. ஐன்ஸ்டீன் இப்போ உயிரோட இருந்திருந்தா என்னைய செருப்பாலயே அடிச்சிருப்பாரு என்றார்.

அது என் கார் நம்பர்
மேலும் பேசிய அவர், படத்தில், நான் ஏதோ ஃபார்முலாவ தப்பா சொல்லிட்டேன்னு எல்லாரும் பேசிக்குறாங்க. நான் ஐன்ஸ்டீனா நடிச்சத கூட ஏத்துக்கிட்டாங்க, ஆனா நான் ஃபார்முலாவை தப்பா சொன்னா ஏத்துங்க மாட்ராங்க என்றார். அந்த ஃபார்முலா என்னுடைய கார் நம்பர் என்று காமெடியாக பேசினார்.

20க்கும் மேற்பட்ட படங்களில்
நடிகர் யோகி பாபு விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படத்திலும், அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும், வலிமை, அரண்மனை3, சைத்தான்கே பச்சா, சதுரங்கவேட்டை 2, டாக்டர், அயலான்,சுந்தரா டிராவல்ஸ், காசேதான் கடவுளடா என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











