நான் மாடு மேய்க்க தான் லாயக்கு என்று கிண்டல் அடித்தார்கள்: கமல் ஹாஸன்

By Siva

சென்னை: நான் மாடு மேய்க்க தான் போகிறேன் என்று எனது குடும்பத்தாரும், நண்பர்களும் என்னை கிண்டல் அடித்தனர் என்று பத்மபூஷன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே நேரம் நடிகர் கமல் ஹாஸன் கவலையில் இருந்தார். காரணம் அவர் நடித்த விஸ்வரூபம் படம் ரிலீஸாவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் கவலை அடைந்த அவர் படத்தை ரிலீஸ் செய்யவிடவில்லை என்றால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று தெரிவித்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

கடந்த ஆண்டு இதே நேரம் கவலையில் இருந்த கமல் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷனை வழங்கி கௌரவம் செய்தது தான் அவரின் மகிழ்ச்சிக்கு காரணம்.

நாடு

நாடு

நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கடந்த ஆண்டு தெரிவித்த கமல் தற்போது நாட்டை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நாடும் தன்னை பார்த்து பெருமைப்படுகிறது என்று தனக்கு தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அலுவலகம்

அலுவலகம்

சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் மாடிப்படி கமலுக்கு சென்டிமென்ட்டானது. அந்த படியில் அமர்ந்து தான் சிறுவன் கமல் திரையுலகில் தன்னால் நுழைய முடியுமா என்று யோசித்தான். கமல் தனது பெற்றோரை இழந்தபோது அந்த படியில் அமர்ந்து தான் அழுதார். அதே படியில் இருந்து தான் அவர் விஸ்வரூபம் பிரச்சனை பற்றி கடந்த ஆண்டு பேட்டி கொடுத்தார்.

மாடு மேய்க்க

மாடு மேய்க்க

சென்னை மவுண்ட் ரோட்டை வெறிக்க வெறிக்கப் பார்த்த பையனாக இருந்து வெகுதூரம் வந்துவிட்டேன். திரையுலகில் சாதிக்க விரும்பிய நான் இறுதியில் மாடு தான் மேய்க்கப் போகிறேன் என்று என் குடும்பத்தாரும், நண்பர்களும் கிண்டல் அடித்தனர் என்றார் கமல்.

அம்மா

அம்மா

ஒழுங்காக படிக்கவில்லை என்றால் மாடு மேய்க்க தான் வேண்டும் என்று என் அம்மா என்னை கண்டித்தார்கள் என்று கமல் கூறினார்.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டும். அதன் பிறகு போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை துவங்கி சில மாதங்களில் படத்தை ரிலீஸ் செய்வோம் என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X