எனக்கு என் பொண்டாட்டியை விட த்ரிஷாவைத்தான் ரொம்ப புடிக்கும்.. என்னடா இப்படி ஓபனா கலாய்க்கிறீங்க!
சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை அவரது மனைவி சங்கீதா விஜய் விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டார். அவரது விவாகரத்து மனுவில் நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை தாண்டிய உறவில் உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், யார் அந்த நடிகை என்கிற கேள்வி எழுந்தது?
மேலும், நடிகையின் பெயரை அடுத்த முறை அழுத்தம் அதிகரித்தால் சொல்லிவிடுவேன் என சங்கீதா தரப்பு மிரட்டிய நிலையில் தான் விஜய் திருமண விழாவுக்கு நடிகை த்ரிஷாவுடன் வந்தார் என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி வருவதாகவும் பேச்சுக்கள் கிளம்பின.

ஆனால், இதுவரை இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கூட விஜய் தனியாகத்தான் சென்றார். ஆனால், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போடுகிறவர்கள் தொடர்ந்து விஜய் மற்றும் த்ரிஷாவை கோர்த்துவிட்டு ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஒன்றை விட்டு விட்டு இன்னொன்று: நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துவிட்டார். அவரது கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் கொடுக்காமல் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் காலதாமதம் செய்து வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தது போல சங்கீதாவை விட்டு விட்டு த்ரிஷாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் விஜய் என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரீல்ஸ்கள் டிரெண்டாகி வருகின்றன. ஒரு காலத்தில் விஜய் பாடல்கள் வந்தால் பலரும் ரீல்ஸ் போட்டு வியூஸ் ஏற்றி வந்த நிலையில், தற்போது விஜய் மற்றும் த்ரிஷா கன்டென்ட் தான் ரீல்ஸ் போடுபவர்களின் பிழைப்பாக மாறியுள்ளது என்கின்றனர்.
பொண்டாட்டியை விட த்ரிஷா தான் புடிக்கும்: போன வருஷம் விஜய் அரசியலுக்கு வந்ததும் பல பெண்கள் எனக்கு என் புருஷனை விட விஜய்யைத் தான் பிடிக்கும் என தவெக நடத்திய பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாக பேசி வந்தனர். இந்நிலையில், தற்போது கணவன்மார்கள் இந்த வருஷம் எனக்கு என் பொண்டாட்டியை விட த்ரிஷாவை தான் பிடிக்கும் என பேசத் தொடங்கிவிட்டனர் என உருவாக்கப்பட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
காலம் பதில் சொல்லும்: விஜய் மற்றும் த்ரிஷாவை தொடர்ந்து ட்ரோல் செய்து வருபவர்களுக்கு எல்லாம் கூடிய சீக்கிரமே காலம் பதில் சொல்லும் என ரஜினிகாந்த் ஸ்டைலில் விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றார். சினிமா, அரசியல் என பிசியாக இருக்கும் விஜய்க்கு இந்த ட்ரோல் தலைவலி வேறு தடையாக மாறிவிட்டதே எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











