அஜீத் புகழ்பாடும் இளம் ஹீரோக்கள் கிஷோர், அஷ்வின்

By Siva

சென்னை: அஜீத் குமார் புகழ்பாடும் நடிகர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர் வனயுத்தம் கிஷோர் மற்றும் மங்காத்தா அஷ்வின்.

அஜீத் குமாருக்கு வயது ஆக ஆகத் தான் அவர் பலர் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை அவருடன் நடிக்கும் இளம் நடிகர்கள், நடிகைகள் அவர் புகழ்பாட ஆரம்பித்துவிடுகின்றனர். நம்ம சிம்பு கூட நான் தல ரசிகன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி அஜீத் புகழ்பாடும் நடிகர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பவர்கள் வனயுத்தம் புகழ் கிஷோர் மற்றும் மங்காத்தாவில் எஸ்.ஐ. கணேஷாக வந்த அஷ்வின்.

தலக்கு எம்மேல எவ்வளவு அக்கறை: கிஷோர்

தலக்கு எம்மேல எவ்வளவு அக்கறை: கிஷோர்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வனயுத்தம் புகழ் கிஷோரும் உள்ளார். அஜீத் குறித்து கிஷோர் கூறுகையில், அஜீத் அனைவர் மீதும் அக்கறை கொண்டவர். அவரது அர்பணிப்பைப் பார்த்து ரசிப்பவன் நான். ஒரு தடவை எனக்கு காய்ச்சல் வந்து நடக்கக் கூட முடியாமல் வேனிட்டி வேனில் படுத்திருந்தேன். அப்போது அஜீத் என்னை பார்க்க வந்துள்ளார். என்னை எழுப்ப முயன்ற எனது உதவியாளரை தடுத்து அவர் தூங்கட்டும் நான் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அவரது அன்பில் ஆடிப்போய்விட்டேன் என்றார்.

அஜீத்துடன் நடிப்பது கௌரவம்: அஷ்வின்

அஜீத்துடன் நடிப்பது கௌரவம்: அஷ்வின்

அஜீத் குமாருடன் நடிப்பது கௌரவம் என்று கூறியுள்ளார் மங்காத்தாவில் எஸ்.ஐ. கணேஷாக வந்த அஷ்வின். தற்போது சோலோ ஹீரோவாக நடிக்கும் அஷ்வின் மீண்டும் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

முனிஷுக்கு அஜீத் அட்வைஸ்

முனிஷுக்கு அஜீத் அட்வைஸ்

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கும் இளம் நடிகர் முனிஷும் அஜீத் புகழ்பாடுகிறார். நிறைவாக, சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று அஜீத் அவருக்கு அறிவரை வழங்கியுள்ளார். வேலையை செய். வரியை செலுத்து. பெரியவர்களை மதி. குடும்பத்துடன் போதிய நேரத்தை செலவிடு. உனது வருவாயில் ஏழைகளுக்கு கொஞ்சம் கொடு. வாழு, பிறரை வாழ விடு என்று கூறியுள்ளார் அஜீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X