வியூஸ் கம்மின்னு புலம்பினாங்க.. இப்போ பாட்ஸ்னு கதறுறாங்க.. ஜன நாயகன் ‘தளபதி கச்சேரி’.. யூடியூப் அடி!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. விஜய்யின் கடைசி படம், கடைசி ஃபர்ஸ்ட் சிங்கிள், ஒன் லாஸ்ட் டான்ஸ் என வெளியான தளபதி கச்சேரி முதல் நாளில் பெரிதாக வியூஸ் அள்ளவில்லை என விஜய் ஹேட்டர்கள் ட்ரோல் செய்தனர்.
முதல் நாளில் வெறும் 12 மில்லியன் தான் என்றும் 2 நாட்கள் கழித்து வெறும் 15 மில்லியன் தான் என்றும் அவ்வளவு தான் உங்க கில்லி பவரா என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. இந்நிலையில், நேற்று இரவு திடீரென வியூஸ் அப்படியே டபுள் ஆகி விட்டது.

உடனடியாக பாட்ஸ் பாட்ஸ் என விஜய் ஹேட்டர்கள் கதற ஆரம்பித்த நிலையில், யூடியூப் அதற்கான பதிலடியை கொடுத்துள்ளது.
தளபதி மவுசு குறைந்துவிட்டதா?: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரெக்கார்டுகளை வைத்து முதலிடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் வெளியான நிலையில், தளபதி கச்சேரி பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ராம்சரண், ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான சிக்கிரி பாடல் தான் அதிக வியூஸ் அள்ளியிருப்பதாகவும் பராசக்தி பட பாடலான அடி அலையே பாடலை விட சற்றே அதிக வியூஸ்களை மட்டுமே ஜன நாயகன் பாடல் அள்ளியிருப்பதாக ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன.
திடீரென டபுளான வியூஸ்: இந்நிலையில், நேற்று இரவு திடீரென தளபதி விஜய்யின் ஜன நாயகன் பாடல் வியூஸ் டபுளாக அதிகரிக்கத் தொடங்கியது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 3 மில்லியன் வியூஸ் கணக்கில் ஏறியதை பார்த்து ஹேட்டர்கள் இரவு தூக்கத்தையே கெடுத்துக் கொண்டனர். ஜன நாயகன் பாடல் வெற்றி பெறவில்லை என்றதும் விஜய் பாட்ஸ்களை களத்தில் இறக்கி விட்டார் என்றும் பாட்ஸ் பதி என்றும் ட்ரோல்கள் பறந்தன.
யூடியூப் விளக்கம்: இந்நிலையில், பொதுவாக அதிக வியூஸ்கள் வரும் போது, அவை ஆர்கனிக் வியூஸா அல்லது பாட்ஸா என்பதை செக் செய்யும் சிஸ்டம் தற்போது யூடியூபில் உள்ளது. அப்படி ஃபில்டர் செய்து அனுப்பிய நிலையில், தாமதமாக வியூஸ் அப்டேட் ஆகும் என யூடியூப் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.இதுவரை ஜன நாயகன் பாடல் 33 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது. விரைவில் 100 மில்லியன் வியூஸ் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன் படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் பெரிய ரெக்கார்டு படைக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











