விஜய் அண்ணா மீது அன்பு.. அனைவருக்கும் நன்றிகள்.. GOAT பற்றி எமோஷனலாக போஸ்ட் போட்ட யுவன்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் விஜய், வெங்கட் பிரபு என ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. முக்கியமாக பாடல்கள் வெளியானபோது பெரும் விமர்சனங்களை சந்தித்த யுவனையும் ரசிகர்கள் இப்போது பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் எமோஷனலாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. வெங்கட்டின் படங்கள் என்றாலே ட்விஸ்ட்டுக்கும், கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதாலும், விஜய்யுடன் முதன்முறையாக அவர் கூட்டணி வைத்திருப்பதாலும் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இன்று ரிலீஸான படத்துக்கு அதே எதிர்பார்ப்பு ரசிகரக்ள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். ப்ரீ புக்கிங்கிலேயே படத்தின் டிக்கெட் விற்பனை மாஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாசிட்டிவ் விமர்சனம்: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து எந்த மாதிரியான சம்பவம் செய்யப்போகிறார் என்ற ஆவலோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வெங்கட் செம ட்ரீட் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், காமெடி, செண்ட்டிமெண்ட் என அனைத்தையும் கலந்துகட்டி ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜை கொடுத்து தங்களை மகிழ்வித்துவிட்டார் என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதேசமயம் முதல் நாள் எப்போதும் ரசிகர்கள் அப்படித்தான் கூறுவார்கள் இரண்டு மற்றும் மூன்றாம் நாளில்தான் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியும் என்றும் ஒருதரப்பினர் கூறிவருகிறார்கள்.
யுவன் மேஜிக்: இதற்கிடையே படத்தின் பாடல்கள் வெளியானபோது யுவன் ஷங்கர் ராஜா மீது பலர் அதிருப்தியடைந்தனர். ஆனால் அதிருப்தி அடைந்தவர்கள் படத்தின் யுவனின் ரீ ரெக்கார்டிங்கை கேட்டுவிட்டு மெய்சிலிர்த்து போயிருக்கின்றனர். ஒவ்வொரு சீனுக்கும், விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளுக்கும் யுவன் ஷங்கர் ராஜா கடுமையாக உழைத்திருக்கிறார் என்று அவரையும் பாராட்ட தவறவில்லை ரசிகர்கள். இப்படி படத்துக்கு இதுவரை பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக படக்குழுவும் ஹேப்பியில் இருப்பதாக தெரிகிறது.
யுவன் போஸ்ட்: இந்நிலையில் யுவன் ஷங்கர் ரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார். அவர் தனது போஸ்ட்டில், ”நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி மக்களே. இந்த வாய்ப்பின் மூலமாக தளபதி விஜய் அண்ணா மீது நான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், அர்ச்சனா கல்பாத்திக்கும் நன்றி.
வெங்கட் பிரபுவுக்கும் நன்றி: அதேபோல் இந்த வாய்ப்பை எனக்கு சாத்தியப்படுத்திக்கொடுத்தது வெங்கட் பிரபு. என் சகோதரர் வெங்கட் பிரபுவுக்கும் GOAT படக்குழுவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இல்லாம் இது கண்டிப்பாக சாத்தியமாகியிருக்காது” என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் ட்ரெண்டாகியுள்ளது. GOAT படத்துக்கு விஜய்க்கு புதிய கீதை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











