சினேகன், கன்னிகா தம்பதியினரை வாழ்த்திய யுவன் ஷங்கர் ராஜா!
சென்னை : சினேகன், கன்னிகா தம்பதியினர் யுவன் சங்கர் ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சினேகன் கன்னிகா ரவியை கடந்த ஜூலை 29 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.
அந்த திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் முன்நின்று நடத்தி வைத்தார். திருமணத்தில் பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

கவிஞர் சினேகன்
பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் சினேகன் பெரிய அளவில் பிரபலமானார்.

மக்கள் நீதி மய்யம்
கவிஞர் சினேகன் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். கவிஞர் சினேகன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று வந்தார்.

காதல் திருமணம்
தமிழ் சினிமா உலகில் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்த கவிஞர் சினேகன், தொலைக்காட்சி சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து வந்தார். கன்னிகா தேவராட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்கள் இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கடந்த ஜூலை 29ந் தேதி கமலஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

நேரில் வாழ்த்து
இந்நிலையில், இன்று சினேகன் கன்னிகா தம்பதியினர் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த புகைப்படத்தை கன்னிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நண்பர்கள் மற்றும் அன்பானவருடன் நேரத்தை செலவிடுவதே எனது மிகப்பெரிய மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளர்.
தங்க மோதிரம் பரிசு
சினேகன் , கன்னிகா திருமணத்தில் கலந்துக்கொள்ள முடியாத இளையராஜா அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தி, சினேகனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார்.


Click it and Unblock the Notifications











