ரிலீசுக்கு முன்னாடியே இவ்ளோ கோடியா? விஜய்னாலே மாஸ்தான்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ளது.
படம் ரிலீசுக்கு முன்னதாகவே அடுத்த படத்திற்கான விஜய் படத்தின் வேலைகள் துவங்கியுள்ளன.
தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கவுள்ள இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

தளபதி விஜய்
தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் முறைகேடுகளை மாற்றும் வாத்தியாராக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

பீஸ்ட் படம்
தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாகவும் கோடைக் கொண்டாட்டமாகவும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் 66 படம்
தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே விஜய் 66 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

குடும்ப பாங்கான படம்
இந்நிலையில் இந்தப் படம் விஜய்யின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற குடும்ப பாங்கான கதையாக அமையவுள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் அறிவித்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் இத்தகைய குடும்ப பாங்கான கதையில் நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை
இந்நிலையில் விஜய் 66 படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதற்கும் சேர்த்து 200 கோடி ரூபாய் கைமாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரூ.200 கோடி வசூல்?
விஜய் 66 படத்தின் சூட்டிங்கே இன்னும் துவங்கவில்லை. படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங்கிற்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது விஜய் 66. இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
Recommended Video

வசூல் சாதனை
விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் 66 படம் சூட்டிங்கிற்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் இந்தப் படம் 500 கோடி ரூபாய் வரையில் கோலிவுட்டில் வசூலிக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











