கணவர் வீட்டார் வேலைக்காரி போல நடத்தினர்-காவ்யா மாதவன்

காவ்யா மாதவனுக்கும், மலையாளியான நிஷால் சந்திரா என்பவருக்கும் கல்யாணம் ஆனது. ஆனால் சில மாதங்களிலேயே கணவரைப் பிரிந்து தாய் வீடு திரும்பினார் காவ்யா. பின்னர் எர்ணாகுளம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தார்.
அதில், கணவர் வீட்டார் என்னை தரக்குறைவாக நடத்தினர். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர். என்னை ஒரு வேலைக்காரி போல நடத்தினர். வீட்டில் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள்.
திரைப்படத்துறையில் பிரபலமானவர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்தார்கள். என்னை மிருகத்தைப்போல எண்ணி நரக வேதனை அடைய செய்தார்கள். அதைத்தொடர்ந்துதான் நான் விவாகரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று கூறியுள்ளார் காவ்யா.
மனுவை விசாரணைக்கு ஏற்ற கோர்ட், செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காவ்யாவின் கணவருக்கு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











