மகேஸ்வரியும் டிவிக்கு வந்து விட்டார்

ஸ்ரீதேவியின் சகோதரியான மகேஸ்வரி தமிழில் ஹீரோயினாக நடித்து வந்தவர். கருத்தம்மாவில் பேசப்பட்ட இவர் பெரிய அளவுக்குப் போக முடியவில்லை. தமிழைத் தவிர தெலுங்கிலும் நடித்து வந்தார். ஆனாலும் இளசுகளின் அலை அதிகரிக்கவே மகேஸ்வரி ஓரம் கட்டப்பட்டு விட்டார். பின்னர் கல்யாணம் கட்டிக் கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் திரையுலகினரின் கடைசிப் புகலிடமான டிவிக்கு வந்து விட்டார் மகேஸ்வரி. மதுபாலா ஹீரோயினாக நடிக்கும் செளந்தரவல்லி மெகா தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம் மகேஸ்வரி.
மதுபாலாதான் ரெக்கமன்ட் செய்து இந்த தொடரில் மகேஸ்வரியை நுழைத்து விட்டுள்ளாராம். மதுபாலாவுமே முதல் முறையாக டிவி சீரியலுக்கு வந்துள்ளார் என்பது சுவாரஸ்யமான ஒற்றுமை.
Comments
டிவி தொடரில் மகேஸ்வரி டிவிக்கு வந்தார் மகேஸ்வரி நடிகை மகேஸ்வரி maheswari maheswari acts in mega serial soundaravalli


Click it and Unblock the Notifications