விரைவில் மீரா ஜாஸ்மின் கல்யாணம்!

பிரபல மாண்டலின் கலைஞர் சீனிவாஸின் தம்பிதான் ராஜேஷ். இவரும் ஒரு மாண்டலின் கலைஞர்தான். இவரும், நடிகை மீரா ஜாஸ்மினும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் கல்யாணம் நடந்து விட்டதாக கூட சில காலத்திற்கு முன்பு செய்திகள் வெளியாகின. சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து இருவருமே வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் மீராவை விரைவில் மணக்கவிருப்பதாக ராஜேஷ் முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது திருமணம் இனியும் தாமதமாகாது. விரைவில் திருமணம் நடைபெறும். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதா, இல்லையா என்பதை மீராதான் முடிவு செய்ய வேண்டும். அதை நான் அவரிடமே விட்டு விட்டேன் என்றார்.
மீரா, ராஜேஷ் திருமணம் குறித்து சீனிவாஸ் கூறுகையில், இது தான் எதார்த்தம். இதை எங்களுடைய குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளது, ராஜேஷின் முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்றார்.
இதன் மூலம் ராஜேஷ் குடும்பத்தில் திருமணம் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. தற்போது அவை நீங்கியிருப்பதால்தான் திருமணம் குறித்து ராஜேஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.
ராஜேஷ் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மீரா ஜாஸ்மின் கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











