36வது பிறந்த நாள்- குடும்பத்துடன் கொண்டாடிய ஐஸ்வர்யா

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஐஸ்வர்யா ராய்க்கு இன்று 36வது பிறந்த நாளாகும். இதை மும்பையில் உள்ள தனது மாமனார் குடும்பத்துடன் எளிமையான முறையில் கொண்டாடினார் ஐஸ்வர்யா. இதில் மிக நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மணிரத்தினத்தின் ராவணா படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், அதில் நடித்து முடித்து விட்டார். அடுத்து சஞ்சய் லீலா பன்சாலியின் குஜாரிஸ் படத்தில் நடிக்கவுள்ளார். ஹ்ரித்திக் ரோஷனுடன் இதில் ஜோடி சேருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் இன்று பிறந்த நாளையொட்டி கிடைத்த கேப்பில் அதை அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் கொண்டாடினார் ஐஸ்வர்யா.
இதுதவிர ரஜினியுடன் எந்திரன், அக்ஷய் குமாருடன் ஆக்ஷன் ரீப்ளே ஆகியவற்றிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து இன்று அதிகாலை அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதுகையில், இது குடும்பத்தினருடன் நடந்த எளிய நிகழ்ச்சி. ஐஸ்வர்யா நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











