ஐஸ்வர்யாவுக்கு இன்று 37வது பிறந்த நாள்-குடும்பத்தினருடன் கொண்டாட்டம்

நேற்று நள்ளிரவிலிருந்தே ஐஸ்வர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவியத் தொடங்கி விட்டதாம். இன்று காலை தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் புடை சூழ வீட்டிலேயே கேக் வெட்டிக் கொண்டாடினார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா பிறந்த நாள் குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில், நாங்கள் வீட்டுக்குக் கிளம்பி விட்டோம் (நேற்று). நள்ளிரவாகி விட்டது. எனது மருமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். மருமகளே, இதுவரை நடந்த சாதனைகளை விட இன்னும் பல பெரிய சாதனைகளை புரிவாயாக என்று வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார் அமிதாப்.
இன்று மதியம் தனது கணவருடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. இந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். நீல நிற உடையில் கையில் மெஹந்தியுடன் படு ஜோராக காணப்படுகிறார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











