மர்மயோகியில் நான் இல்லை-ஆசின்

மர்மயோகி படத்தில் பல நடிகைகள் நடிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே ஹேமமாலினி, த்ரிஷா, ஷ்ரியா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் ஆசின் நடிப்பதாகவும் செய்திகள் வந்தன.
இந்தச் செய்தியை ஆசின் முதலில் மறுத்தார். ஆனால் பின்னர் இதுபற்றி யோசிப்பதாகக் கூறியிருந்தார். இப்போது மர்மயோகி படத்தில் தான் இல்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசின் கூறியிருப்பதாவது:
மர்மயோகி படத்தில் நான் நடிப்பதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. இப்போது நான் மூன்று இந்திப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். எந்த தமிழ்ப் படத்திலும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை.
ஏவிஎம் தயாரிக்கும் விஜய் படத்தில் நடிக்கப் பேச்சு நடந்து வருகிறது. இன்னும் எதுவும் முடிவாகவில்லை.
Comments


Click it and Unblock the Notifications