அருந்ததி இந்தி ரீமேக்கில் ஆசின்?

சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தெலுங்குப் படம் யாரும் எதிர்பாராத வகையில் பல கோடிகளைக் குவித்துவருகிறது, உலகம் முழுக்க.
இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் ராம்கோபால் வர்மாவின் உறவினர் மதுவும் இதை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
இதில் அனுஷ்கா கேரக்டரில் நடிக்க ஆசினிடம் பேசியுள்ளனர். 'இந்த கேரக்டரில் ஆசின் சிறப்பாக பொருந்துவார். அதனால் அவரிடம் பேசியுள்ளோம். இன்னும் சில நாட்களில் மற்ற விவரங்களை அறிவிக்கிறோம்' என்று கீதா ஆர்ட்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசினிடம் கேட்டபோது, அருந்ததி படம் மிக அருமையான படைப்பு. இதன் இந்திப் பதிப்பில் என்னை நடிக்கக் கேட்டிருப்பது உண்மைதான். எனது மற்ற படங்களின் ஷெட்யூலைப் பார்த்துவிட்டு முடிவு சொல்வதாகக் கூறியுள்ளேன். எனக்கு தேதிகள் இருந்தால் நிச்சயம் இந்தப் படத்தைச் செய்வேன், என்கிறார் ஆசின்.
இந்தப் படத்துக்காக ரூ.2 கோடிக்கும் மேல் ஆசினுக்கு சம்பளம் தர முன் வந்துள்ளாராம் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்.
கஜினியில் அள்ளியதை மறக்க முடியுமா அல்லுவால்!


Click it and Unblock the Notifications











