தாய்லாந்து புரட்சியயாளர்களின் பிடியில் பாவனா!

By Staff

Bhavans
மலையாள பட ஷூட்டிங்குக்காக தாய்லாந்து சென்ற நடிகை பாவனா அந்நாட்டு புரட்சித் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவருடன் நடிகர்கள் பிருத்விராஜ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவும் மாட்டிக் கொண்டிருப்பதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து பெரும் பதட்டம் எழுந்துள்ளது.

லாலிபாப் என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங்குக்காக பாவனா, பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் குழு சமீபத்தில் தாய்லாந்து சென்றது.

தாய்லாந்தில், அந்நாட்டு பிரதமர் சோம்சாய் வாங்சவாத் ஊழல் ஆட்சி புரிவதாகக் கூறி, அவருக்கு எதிராக மக்கள் புரட்சியில் இறங்கியுள்ளனர்.

புரட்சியாளர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சொர்ணபூமி என்ற சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதனால் தாய்லாந்து சென்ற ஏராளமான பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

லாலிபாப் ஷூட்டிங்குக்காக பிருத்வி ராஜ், பாவனா, இயக்குனர் ஷாஃபி, ஒளிப்பதிவாளர் அழகப்பன் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் தாய்லாந்து சென்றிருந்தனர். இந்தியா திரும்புவதற்காக நேற்று காலை அவர்கள் பாங்காக் விமான நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது அவர்களைச் சுற்றி வளைத்த புரட்சியாளர்கள் பாவனா உள்ளிட்ட படப்பிடிப்புக் குழு மொத்தத்தையும் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை படக் குழுவினர் நிலை என்ன என்று தெரியவில்லை. அவர்களில் ஒருவரிடமிருந்தும் தகவல் கிடைக்கவில்லை.

அவர்களை மொபைலில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் மலையாளத் திரையுலகமே பெரும் பதட்டத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X