படம் எடுக்கும் பூமிகா

ரோஜாக் கூட்டம் மூலம் தமிழுக்கு வந்த பூமிகா அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்குக்குப் போனார். அப்படியே கல்யாணத்தையும் முடித்துக் கொண்டார்.
கல்யாணமான பின்னரும் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் பூமிகா தற்போது தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் என்ற படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறாராம் பூமிகா. எனக்கு இதுவரை இப்படி ஒரு ஹோம்லியான கேரக்டர் வந்ததே இல்லை. மேலும், கதையும் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்தப் படத்திற்குப் பின்னர் நான் மிகப் பெரிய அளவில் பேசப்படுவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பூமிகா.
தற்போது தெலுங்கில் தகிட தகிட என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்து வரும் பூமிகா, அடுத்து தமிழிலும் யாகம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம். இப்படத்தில் இவரே ஹீரோயினாக நடிக்கலாமாம்.
தமிழ்ப் படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் பூமிகா.


Click it and Unblock the Notifications











