ஆபாச நடிப்பு-நயன்தாரா மீது வழக்கு!!

அஜீத்- நயன்தாரா நடித்து தீபாவளிக்கு வெளாகியுள்ள படம் ஏகன்'. தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளாவிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியானது.
இந்தப் படத்தில் நயன்தாரா ஆபாசமான உடை அணிந்து நடித்திருப்பதாக கூறி திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நடிகை நயன்தாரா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து இன்று சென்னையில் உண்ணாவிரதத்துக்காக வந்திருந்த நயன்தாராவிடம் சில நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளிக்கையில், இந்த வழக்கு குறித்தெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நான் அந்தப் படத்தில் ஆபாசமாக நடிக்கவில்லை. சென்சாருக்குத் தெரியாதது இவர்களுக்குத் தெரிந்துவிட்டதா.
இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இன்னொன்று இதைப் பற்றியெல்லாம் கேட்க வேண்டிய இடம் இதுவல்ல என்றார்.


Click it and Unblock the Notifications











