சுசீந்திரன் படம்: விக்ரமுக்கு ஜோடி தீக்ஷா சேத்!
தெலுங்கு சினிமாவின் ஹாட் நடிகையான தீக்ஷா சேத் தமிழுக்கு வருகிறார்... அதுவும் விக்ரம் ஜோடியாக!
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை இயக்குபவர் வெண்ணிலா கபடிக் குழு தந்த சுசீந்திரன்.
போக்கிரி படத்தைத் தயாரித்த கனகதாரா ரமேஷ் தயாரிக்கும் இந்தப் படம், விரைவில் துவங்கவிருக்கிறது. விஜய் இயக்கிவரும் பிதா பட வேலைகள் முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் நாயகியாக தீக்ஷா சேத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு மிஸ் பெமினாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தீக்ஷா சேத். தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான வேதம் (சிம்பு ரீமேக்கி வரும் வானம்) படத்தின் நாயகி இவர்தான். தெலுங்கில் ரவிதேஜா, கோபிசந்த் என முன்னணி ஹீரோக்களின் இப்போதைய ஜோடி இவர்தான்.
தமிழில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "சென்னை எனக்குப் புதிதல்ல. சில ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தவள் நான். தமிழ்ப் படம் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. தமிழ் எனக்கு நன்றாக தெரியும் என்பதால், மொழிப் பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்", என்கிறார்.
இந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக அபிநயா நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











