டைரக்டராகும் கீது மோகன்தாஸ்

பொம்முக்குட்டி அம்மாவுக்குப் படத்தில் குட்டி பாப்பாதான் கீது மோகன்தாஸ். தமிழில் கமல்ஹாசன் தயாரித்த நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் பெரிய அளவில் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து தாய் மொழியான மலையாளத்திலேயே கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் இப்போது கீது மோகன்தாஸ் டைரக்டராகி விட்டார். கேக்குண்டோ என்ற படத்தை கீது இயக்குகிறார். எந்தவித விளம்பரமும் இல்லாமல் படத்தின் ஒரு ஷெட்யூலையும் முடித்து விட்டாராம்.
தனது படம் குறித்து கீது கூறுகையில், மக்களின் நலன் குறித்து நாம் நிறையப் பேசுகிறோம். ஆனால் இது அவர்களை பாதிக்கிறதா?, அப்படியானால் எந்த வழியில்?, இதைத்தான் எனது படத்தில் சொல்லப் போகிறேன் என்று புரியாத புதிராக விளக்குகிறார்.
இந்தப் படம் மொத்தமே அரை மணி நேரம்தான் ஓடுமாம். படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய வேலைகளில் இப்போது ஜரூராக இருக்கிறாராம் கீது.


Click it and Unblock the Notifications











