இந்திக்கு கண்டிப்பாக கிளாமர் -ஷெரின்

By Staff

Sherin
இந்தி ரசிகர்களின் மன நிலை வேறு. எனவே இந்திப் படங்களில் கண்டிப்பாக கிளாமர் காட்டி நடிப்பேன் என்கிறார் ஷெரின்.

முதல் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை துள்ள வைத்த ஷெரின் இப்போது தமிழில் சுத்தமாக அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்.

ஏன் இந்த மாயம், எங்கே போனீர்கள் என்று கேட்டால் வேறு மாதிரியாக பதில் தருகிறார்.

ஆக்சுவலி நான் தற்போது கன்னடம், இந்தியில் நடித்து வருகிறேன். மலையாளத்திலும் அழைக்கிறார்கள்.

கன்னடத்தில் எனது ஐந்தாவது படமாக ஏ.கே.47 உருவாகி வருகிறது. அதேபோல, இந்தியில் ஜர்னலிஸ்ட் என்ற அருமையான படம் கிடைத்துள்ளது.

இதில் பெண் நிருபராக வருகிறேன். இந்தப் படம் எனக்கு இந்தியில் பெரிய இடத்தைப் பெற்றுத் தரும்.

இப்படி இந்தி, கன்னடத்தில் பிசியாக இருப்பதால்தான் தமிழில் நடிக்க நேரம் இல்லாமல் போய் விட்டது. இருப்பினும் தற்போது வில் என்ற படத்தில் நடிக்கவுள்ளேன்.

தமிழ் தான் என்னை வெளியுலகுக்கு அடையாளம் காட்டியது. எனவே அதை மறப்பது என்ற பேச்சே இல்லை.

இந்தியில் நான் நிச்சயம் கவர்ச்சி காட்டித்தான் நடிப்பேன். காரணம் அங்குள்ள ரசிகர்கள் வேறு, இங்குள்ளவர்கள் வேறு. எனவே நிச்சயம் இந்தியில் கவர்ச்சி இருக்கும் என்றார் ஷெரின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X