ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்-ஸ்னிக்தா

By Staff

Sniktha
'கத்தாழ கண்ணால...' என்ற ஒரே பாடலின் மூலம் கோடம்பாக்கத்தையே சுழல விட்டவர், ஸ்னிக்தா. இந்த ஒரு பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் படு பிரபலமாகி விட்டார்.

தொடர்ந்து ஒற்றைப் பாடலில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் நடிக்க விரும்பவில்லையாம் அவர்.

நான் நல்ல டான்ஸர் மட்டுமல்ல... நல்ல நடிகையும் கூட. அதை நிரூபிக்க சான்ஸ் கொடுங்கள் என்பதுதான் என்னை ஒரு பாட்டுக்கு அழைக்கும் இயக்குநர்களுக்கு நான் சொல்லும் பதில், என்கிறார் ஸ்னிக்தா.

மேலும் அவர் கூறுகையில், இப்போது 'ராஜாதி ராஜா' படத்தில் லாரன்ஸுடன் ஜோடியாக நடிக்கிறேன். படத்தில் 5 நடிகைகள் இருந்தாலும் படம் முழுவதும் நான் வருகிறேன்.

அடுத்து, என்னை 'அஞ்சாதே'யில் அறிமுகப்படுத்திய மிஷ்கின் இயக்கத்தில் 'நந்தலாலா'வில் நடிக்கிறேன். இந்த படம் முடியும் தருவாயில் இருக்கிறது. இப்போதைக்கு வேறு படங்கள் வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்தவுடன் நிச்சயமாக என் நடிப்பு பேசப்படும், என்கிறார் நம்பிக்கையுடன்.

அடுத்த கேள்வியைத் தொடங்கும் முன்பே, அதை யூகித்து விட்டவரைப் போல இப்படிச் சொன்னார்:

எனக்கு என் மனசாட்சிதான் முக்கியம். நான் நல்ல நடிகை மட்டுமல்லை, நேர்மையானவளும் கூட. அதனால் என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களுக்கு பதில் சொல்வதே இல்லை, என்றார் அழுத்தமாக.

இதை யாரும் கேட்கவேயில்லையே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X