ஐஸுக்கு வயசு 35!

By Staff

Aishwarya Rai
நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 35வது பிறந்த நாளை, கேரளாவில் மணிரத்தினம் ஷூட்டிங்குக்கு இடையே சிறப்பாக கொண்டாடினார்.

மணிரத்தினம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். இதில் அபிஷேக் பச்சன், விக்ரம், பிரியாமணி, கார்த்திக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கொச்சிக்கு அருகே படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவுக்கு 35வது பிறந்த நாள். இன்றும் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார். படப்பிடிப்புத் தளத்திலேயே தனது பிறந்த நாளை அவர் படக்குழுவினரோடு கொண்டாடினார்.

கேரள படப்பிடிப்புக்கு அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் தாமதமாக வந்து கலந்து கொண்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு நடித்துக் கொடுக்கவுள்ளனர்.

மணிரத்தினம் படத்தில் ஐஸும், அபிஷேக்கும் இணைந்து நடிப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன் குரு படத்தில் இருவரும் இணைந்திருந்தனர். இந்த இரு படங்களும்தான் தள்ளாட்டத்தில் இருந்து வந்த அபிஷேக்கின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த உதவியது.

மணிரத்தினத்தின் இருவர் படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X