'கிஸ்'ஸுக்குப் பயந்த 'சிவாஜி ஜூனியர்'!

சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி ஜூனியர் இப்போது நடிகராகியுள்ளார். சிவாஜி ஜூனியரின் சித்தியான ஸ்ரீபிரியாவின் தயாரிப்பில் உருவாகும் சிங்கக்குட்டி படத்தில் அவர்தான் நாயகன்.
சிவாஜி ஜூனியருக்கு ஜோடியாக நடிப்பவர் கெளரி முஞ்சால். படத்தில் ஒரு முத்தக் காட்சி இடம் பெறுகிறது. அதாவது கெளரி முஞ்சாலின் முகத்தை இழுத்து முத்தம் கொடுப்பது போல காட்சி.
இயங்குநர் வெங்கடேஷ் பல டேக் வாங்கியும் காட்சி சரியாக வரவில்லையாம். காரணம், ஜூனியர் சிவாஜிக்கு முத்தமிட தயக்கம். இதனால் டேக் போய்க் கொண்டே இருந்தது.
என்ன பண்ணலாம் என்று யோசித்த வெங்கடேஷுக்கு ஒரு ஐடியா வந்தது. கெளரியை தனியாக கூப்பிட்டு காதில் கிசுகிசுத்தார். அவரும் ஓ.கே. சொன்னார்.
மீண்டும் அந்த முத்தக் காட்சி ஒரு டேக் போனது. இந்த முறை சிவாஜியை இழுத்துப் பிடித்த கெளரி, சிவாஜிக்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்க காட்சி கன கச்சிதமாக அமைந்தது.
வெங்கடேஷ் முகத்தில் திருப்தி, சிவாஜி முகத்திலோ வெட்கம். இருந்தாலும் காட்சி சூப்பராக வந்து விட்டதால் யூனிட்டார் பரம திருப்தி அடைந்தார்களாம்.
இதி்ல் மாளு மாளவிகாவும் இருக்கிறார்...


Click it and Unblock the Notifications











