'மாமனார்' ஊருக்குப் போகும் கரீனா!

பாலிவுட் ஹாட் ஸ்டார்களில் ஒருவரான கரீனா கபூரும், சைப் அலிகானும் கொஞ்ச காலமாக காதலித்து வருகின்றனர்.
சைப் அலிகானுடன் ஏற்பட்ட நெருக்கத்தால்தான் ஷாஹித் கபூருடனான காதலைத் துறந்தார் கரீனா. அதன் பின்னர், சைபும், கரீனாவும் படு தீவிரமாக காதலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரீனாவின் வாழ்க்கையில் முக்கிய கட்டம் வந்துள்ளது. மாமனார் ஊரான பட்டோடிக்கு, அவரது குடும்பத்தினர் அழைத்துள்ளனராம்.
இதை கரீனா மிகப் பெருமையாக கருதுகிறார். காரணம், பட்டோடி குடும்பத்தினர் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் பட்டோடியில் உள்ள தங்களது பாரம்பரிய இல்லத்தில் குழுமுவது வழக்கம். அப்போது குடும்பத்தினர் மட்டுமே இதில் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில் தன்னை அழைத்துள்ளதை கரீனா பெருமையுடன் கூறி வருகிறார்.
இதுகுறித்து சைப் அலிகான் கூறுகையில், உண்மைதான். எங்களது குடும்பத்தின் குளிர்கால குழுமத்தில் இந்த முறை கரீனாவும் பங்கேற்கிறார்.
கரீனா மீது எனது குடும்பத்தார் மிகவும் பாசமாக உள்ளனர். கரீனாவும் அப்படியே. இப்போது கரீனா எங்களது குடும்பத்தில் ஒருவர் என்று கூறியுள்ளார் சைப்.
விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் சைப் கூறியுள்ளார். ஆனால் அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும் எனவும் சைப் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











