கல்யாணம்..தள்ளிப் போட்ட கார்த்திகா

நம்நாடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மலையாளத்து கார்த்திகா. நம்நாடு அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் திண்டுக்கல் சாரதி, கார்த்திகாவின் மார்க்கெட்டை லாக் செய்திருந்த பூட்டை திறந்து விட்டு விட்டது.
திண்டுக்கல் சாரதியில் கார்த்திகாவின் அட்டகாசமான நடிப்பால், கவரப்பட்ட கோலிவுட்டினர் இப்போது கார்த்திகாவையும் தேடிப் போக ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் திண்டுக்கல் சாரதிக்குப் பின்னர் தொடர்ந்து நடிக்காமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடும் எண்ணத்தில் இருந்தர் கார்த்திகா.
இருப்பினும் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்ததால் யோசித்துப் பார்த்து தற்போது திருமணத்தை தள்ளி வைத்து விட்டாராம்.
இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம். தனது முடிவை பெற்றோரிடமும், தனக்காக வீட்டினர் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை வீட்டாரிடமும் கார்த்திகா கூறியுள்ளார். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனராம்.
இதனால் கார்த்திகாவின் திருமணம் அடுத்த வருடத்திற்குத்தானாம். அதுவரை நடிப்பு சேவையை தொடரப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











