கம்ப்யூட்டர் எஞ்ஜினியருடன் 'கருத்தம்மா' ராஜஸ்ரீ இரண்டாவது திருமணம்!

By Staff

Rajasri
கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தனது உறவுக்காரரும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருமான புஜங்கராவ் என்பவரை விஜயவாடாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநர் பாரதிராஜாவால் கருத்தம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், ராஜஸ்ரீ. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஜிம் மாஸ்டர் அன்சாரியை ரகசிய திருமணம் செய்தார்.

திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் ராஜஸ்ரீ, ஹைதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் புஜங்கராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ராஜஸ்ரீக்கு நெருங்கிய உறவினர் இந்த புஜங்கராவ். விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

ராஜஸ்ரீ-புஜங்கராவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸில், வருகிற 4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ராஜஸ்ரீ, ஆந்திராவை சேர்ந்தவர். பெரிய மருது, அசோகவனம், நந்தா உள்பட பல படங்களில் நடித்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, அய்யனார் என்ற படத்தில் நடித்து முடித்தார்.

"இனிமேல் சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க வேண்டாம் என்று என் கணவர் புஜங்கராவ் கூறிவிட்டதால், நடிப்புக்கு இதோடு முழுக்குப் போட்டுவிட்டேன்" என்றார் ராஜஸ்ரீ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X