செல்போன் மாதிரி காண்டமும் எப்போதும் பாக்கெட்ல இருக்கணும்! - அனுஷ்கா

முன்னாள் யோகா டீச்சரான அனுஷ்கா, படங்களில் படுபிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூக சேவை விளம்பரங்களில் தோன்றுவது வழக்கம்.
இப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார விளம்பரங்களில் தோன்றுகிறார் அனுஷ்கா.
இதில், "காண்டம் யூஸ் பண்ணுங்க... எட்ஸைத் தவிர்க்கலாம். இளைஞர்கள் செல்போன் வைத்துக் கொள்வது போல ஒரு பாக்கெட் காண்டம் வாங்கி வச்சிக்கலாம் பேண்ட் பாக்கெட்ல..." என்கிறார்.
இந்த விளம்பரம் வரவேற்பையும் எதிர்ப்பையும் சமமாகக் கிளப்பி விட்டுள்ளது. 'என்னமோ இளைஞர்கள் சதா சர்வ காலமும் இதே நினைப்புடன் திரிவதைப் போல, காண்டம் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளச் சொல்கிறாரே அனுஷ்கா' என்று கடுப்புடன் விமர்சனம் செய்துள்ளன பத்திரிகைகள்.
Comments


Click it and Unblock the Notifications