சிரஞ்சீவி கட்சியில் மாதவி-சட்டசபைத் தேர்தலிலும் போட்டி

By Staff

Madhavi
ஹைதராபாத்: முன்னாள் நாயகி மாதவி அரசியலில் குதித்துள்ளார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அவர் அக்கட்சிக்காக தீவிர பிரசாரமும் செய்யவுள்ளாராம்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் மாதவி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியப் படங்களில் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார்.

பின்னர் திருமணமாகி கணவர், குழந்தைகளுடன் தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வருகிறார் மாதவி.

இந்த நிலையில், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணைந்துள்ளார் மாதவி. சிரஞ்சீவியே மாதவியை அரசியலுக்கு அழைத்து வந்துள்ளார். தனது கட்சிக்காக பிரசாரம் செய்யுமாறு அவர் கோரவே, மாதவியும் சம்மதம் தெரிவித்தாராம்.

இதையடுத்து அடோனி தொகுதியில் மாதவி போட்டியிடவுள்ளார். சிரஞ்சீவியும், மாதவியும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திரையுலக நட்பு இப்போது அரசியல் நட்பாகவும் மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் நீண்ட காலமாக காங்கிரஸில் இருந்து வரும் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, அக்கட்சிக்கு முழுக்குப் போடப் போகிறார். அவரது மனைவியும், நடிகையுமான விஜயநிர்மலாவுக்குவும், சகோதரர் ஆதிகேசவராவுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் மறுத்து விட்டதால் கடுப்பாகியுள்ளாராம் கிருஷ்ணா. இதனால் காங்கிரஸை விட்டு விலகி தெலுங்கு தேசத்திற்கு வரப் போகிறார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X